பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
152


றேல் நீர் கூறுவது மவ்வாறே பொருள்படுமா லெனின், மய்க்கவறிவுடையார்க்கு அவ்வாறு பொருள்படும். யாம் வேறெனக் கொண்டவதனை, ‘மூன்று குற்ற மூன்று குண மூன்று மல மூன்றவத்தை-யேன்று நின்று செய்யும் இருவினை” ஆகலின், அவ்வினையினியல் பறிதற்கு நீர் யார்? 'இருவினை பாசமும் மலக்க லார்த்தபின்’ என்றற்றொடக்கத்துச் சுருதிகளைக் கேட்க மறந்தீர் போலும் (பக். 40)

என்று அவர் நாகரிகமாக எதிர்ப்பாரை மறுத்துள்ளமை காண்கின்றாேம். சோமசுந்தர நாயகர் மாணவருள் பலர் மாற்றாரை வேகமாகச் சாடுவதும் அதற்குப் பதிலாக மாற்றார் கீழான நிலையில் மாறுபாட்டுரை வழங்குவதும் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும். இத்தகைய தர்க்கங்கள் பல உள்ளன. ஒன்று மட்டும் காண்போம்.

மெய்கண்ட சிவதூஷண நிக்ரஹம் (1900)

சைவ நிந்தையே தவமெனக்கொண்டுவாழும் ஒரு மாயா வாதியார் சிலரைக் கும்பு கூட்டிக் கொண்டு, சைவ சமயிகள் பிரசங்கஞ் செய்யு மிடங்கடோறும் அவர்கனை யனுப்பிச் சிலகாலமாய்க் கல்லல் விளைத்து வருகின்றனர், அக்கூட்டத்தார் சைவப்பிரசங்கிகளோடு சாஸ்திரவாதம் புரிய வல்லுநரல்லர். பிரசங்கியார் ஒன்றை யெடுத்துச் சொல்லுவதன் முன்னரே மூலைக்கு மூலை கிளம்பி நின்று, பெருங்கூச்சலிட்டு பிரசங்கவொலி கேட்கவொட்டாமல், ஆரவாரிப்பதே அவர் தொழில். இதனால், மாயாவாதம் சைவத்தை செயித்துவிட்டதென்பது அவர் துணிபு. இம்மட்டிலொழியாமல் அவர் வரும்போது தஸ்திழமூட்டை கொண்டு வருவர். அவை சிவநிந்தை பொதிந்த காயிதக் குப்பையாம்.