பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
156


லாமையையும்உற்பத்தியான உடையவனுடைய உயர் நிலையையும், உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும் சொல்கிறது திருமந்திரம். கர்மத்தையும் கர்மத்தில் களையறுப்பையும், கண்ணனையும் கண்ணன் கருத்தையும், கதியையும் பற்றும் படியையும், பரனையும் பற்றும வனையும், பாபத்தையும் பாபத்தில் பற்றுகையையுஞ் சொல்லுகிறது. சரமபரலோகம். கர்மம் கைங்கர்யமாயிருக்கும். ஜ்ஞாநம் ஸ்வரூபமாயிருக்கும். பக்தி போகமாயிருக்கும். ப்ராப்யம் தாரகமாயிருக்கும். உக்தி காலக்ஷேபமா யிருக்கும். நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம். நம் பக்கம் பேற்றுக்கு (நம:) என்னாதவர்களையும் வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்ப தொரு ஒளதார்ய விஷேமுண்டு. நாரங்களுக்கு நைரந்தர்யும் வேஷம். (நாராயணனே நமக்கே பறை தருவான்)

அனுஷ்டான விதியும் திருவாரதனக் கிரமமும்; (அரங்கசாமி முதலியார் 1888)

காலக்ஷேபம் செய்தல்:-ஸ்ரீபகவத் விஷயாதி அஷ்டாத சரஹச்ய முதலிய வியாக்யான கிரந்த காலக்ஷேபங்களைக் காலோசிதமாய்ச் செய்து தண்டஞ் சமர்ப்பித்து, தீர்த்த வடியைச் சேர்ந்த தீர்த்தம் ஸ்வீகரித்துக்கொண்டு, திருமண் பெட்டியைச் சேர்த்து எழுந்தருளச் செய்யவேண்டியது.

விஷ்ணு ஆலய தரிசன விதி: (மதுரை ரங்கையரவர்கள் 1890):

முன்னுரை :-இவ்வுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலு முள்ள சகலான்மகோடிகளு மெளிதில் இகபர சாதன சித்தி பெற வெண்ணி உபயவேத, இதிஹாச, புராண, பஞ்சராத்திராதி ஆகம சாஸ்திரங்களாலும் பூர்வாசாரியர்கள் செய்தருளிய கிரந்தங்களிலும், பல பரக்கச் சொல்லிய