பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158


னிறைச் சடைமுடி புனைந்த வைசம்பாயனர் இது வரையிலுஞ் சொல்லி வந்த பஞ்சம வேதமென்னும் பரிசுத்த அமுதத்தைக் கற்புடைமையின் மனைமாட்சியினுயர்ந்த பொற்புடை யவயுஷ்டா தேவிக்குப் புருடசிலாக்கியனை ஜெனமே ஜெய மகாராஜன், காதெனும் வாய்மொழியா யருந்தி-அற்புதமடைந்து—மற்புயம் வளர்ந்து மகிழ்ந்து, விற்பனவிவேக மேலோனான வைசம்பாயனரை நோக்கி, சுவாமி, அப்பால் பாண்டவருக்கு நேரிட்ட பான்மையைப் பகர வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்க, வேதபாராயணராகிய வைசம் பாயனர் விளம்பத் தொடங்கினார்.

இவ்வாறே இராமாயணத்துக்கும் சில உரைநடைத் தொகுதிகள் வந்துள்ளன. இவ்வாறு வைணவ சமயமும் சென்ற நூற்றண்டில் உரைநடையை வளர்த்தது எனலாம்.

சமணம்

சென்ற நூற்றாண்டில் சமண சமயம் பற்றி உரைநடை இலக்கியம் அதிகமாக இல்லை. பெளத்த சமயம் பற்றியும் சில நூல்களே வெளிவந்துள்ளன. முன்னரே உள்ள பாடல்களுக்கு விளக்கமேயென அமைந்துள்ளனவன்றி வேறு பெரும் உரைநடை நூல்கள் எழுதப்பெறவில்லை. அவ்வாறு வந்துள்ள இரண்டொன்றும் மணிப்பிரவாள நடையோ என்னுமாறு அமைந்த நிலையையே காண முடிகின்றது.

ஜீவலம்போதனை என்ற நூலுக்குச் சென்ற நூற்றாண்டில் (1899) அச்சான ஒர் உரையை இங்கே காணலாம். பாட்டு எளிய தமிழ் நடையில் உள்ளது.

பாட்டு;

ஒர்ந்துயிரே கேளுங்க ணிற்ப நிலையாத
வார்ந்தறிவு காண்பனவே யார்ந்தநிலை-சேர்ந்த
வினையிஞ லாமுடலு மேவுமனை மக்கள்
கினையுங்கா னில்லாவா னேர்ந்து (336).