பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
164

7. சையித்துன் கிஸ்ஸா 1882 (பாடல் நூல்)

அல்கமதுலில்லாஹிறப்பில் ஆலமீன் வானம் பூமி அரசகுரு சுவர்க்கம் நரக மலைகடல் மா முதலிய பறவைகளும் நாற்காலிகளும் மலக்குகள் மனிதர்கள் ஜீன்கள் படையுண்ட படைப்புக்கள் யாவற்றும் புகழும் புகழ்ச்சிகளெல்லாம் அல்லா குத்த ஆலாஒருவனுக்கே லாயக்காயிருக்கின்றன.

8. ஜவாஹிருல் அதிஸ்—அப்துல் காதிர் சாயபு

1875 ஜனவரி 2-ஆம் பதிப்பு.

முதலாவது பாபு

தொழுகையைத் தொழ சோம்பேறியாயிருப்பதும் தொழுகையைத் தொழாமல் விட்டுவிடுவதின் அசாபின் பயானும் இன்னம் ஒலுவுச் செய்வதும் தொழுகையை விடாமல் தொழுவதின் சபா பின் பசீலத்தின் பேரில் - அல்லா குத்த ஆலா குற்றானில் திருவுளமாயிருக்கின்றன்.}}

இவைகளேயன்றிக் காதிரசன மரைக்காயர் எழுதிய *கிருத்து மததீபிகை', முகமதுலெப்பை மரைக்காயர் எழுதிய ‘தத்துவ பரகண்டனம்’, ‘சிதடர் பரமறுப்பு’, செய்யிது அப்துல் வகாப் எழுதிய ‘தர்க்குல் ஜன்னா' முதலிய உரை நடை நூல்களும் உரைகளும் வந்துள்ளன. எனவே இசலாமும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரையால் தான் வளர்ந்து, தமிழ் உரைநடையையும் வளர்த்தது என்பது கண் கூடு.

கிறித்துவம்

சமயத்துறையில் கிறித்துவ சமயம் பற்றிய ஆய்வுடன் இப்பகுதியை முடித்துக் கொள்ளலாம். கிறித்துவ சமய நூல்களே சென்ற நூற்றாண்டில் அதிகமாக வெளிாயயின தம் சமயம் பரப்புதற்கெனப் பல்வேறு வகைப்