பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
166

கற்பிக்கிறது. அதில் காலையில் எழுந்திருக்கும்போது அவர் தம் உள்ளம் அமைய வேண்டிய வகை விளக்கப்பெற்றுள்ளது. விடியற்காலையில் கோயிலின் மணி ஒலி எழுமல்லவா? அதைத் தொடர்ந்து அவர்தம் செயலும் தொடங்குகிறது,

மணிச் சத்தம் கேட்டவுடனே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதர் உங்களைக் கூப்பிடுகிறார் என்று நினைத்து, தாமதியாமற் படுக்கையின்மேல் உட்கார்ந்து சிலுவை அடையாளத்தை வரைந்து அவனவன் தனது வஸ்திரத்தைப் பரிசுத்த கன்னியா ஸ்திரியின் கையிலே நின்று பெற் றுக்கொள்கிறது போல் உடுத்திக் கொள்ளுகிறது. இதற்குள்ளாகத் தியானிக்க வேண்டியதுகளின் பேரிற்குரிய சில நினைவுகனே நினைத்துக் கொள்ளுகிறது.

இதன் பின் தியான விடத்தில் முழங்காலிலிருந்து சிலுவை அடையாளத்தை வரைந்து நெற்றி தரைமட்டும் வணக்கத்துடன் குனிந்து, பரிசுத்த திருத்துவத்துக்கு ஆராதனையாகச் சொல்லுகிற தாவது–பிறகு செபம்.

இவ்வாறு அவர்தம் உரைநடை செல்லுகிறது. நேற்றைய பேச்சில் கண்ட எளிய (கொச்சை) வகையில் இந்த நடை அமைகின்றது. இந்த நடையிலேயே பல நூல்கள் உள்ளன. எனினும் இவை சமய அடிப்படையில் அமைகின்ற காரணத்தால் ஈண்டு எடுத்துக்காட்ட நினைத்தேன். அவர்கள் செபம் செய்யும் வகைக்கு ஒரு மேற்கோள் காணல் ஏற்புடைத்தாகும்.

பரமண்டலங்களிலே யிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக, உம்முடைய ராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறது போலப் பூமியிலேயுஞ் செய்யபபடுவதாக அன்றன்றுள்ள எங்களப்பம் எங்களுக்கு இன்று தாரும். எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் பொறுக்குமாறு போல எங்கள் கடன்களை யெங்