பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14

யும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், கூற்றிடை வைத்த குறிப்பும் என ஆறென்றும், அவற்றுள் உரைப் பகுதி, வழக்கு, பாட்டிடை வைத்த குறிப்பும், பாவின்றெழுந்த கிளவியும், பொருளொடு புணராப் பொய்ம்மொழியும், பொருளொடு புணர்ந்த நகைமொழியும் என நான்கென்றும், வகைப்படுத்துரைத்தார் தொல்காப்பியர் அவற்றுள் பாட்டிடை வைத்து குறிப்பென்பது,'ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்கும் கருத்தினால் வருவது என்று திரு. செல்வக்கேசவராய முதலியார், தம் ‘தமிழ் வியாசங்கள்'என்ற நூலில் இவ்வுரை நடையின் தொன்மை பற்றி விளக்கங் காட்டிச் செல்லுகின்றார்.

தொல்காப்பியர், உரைக்கு இலக்கணம் கூறவந்தவர்.

'தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே' (செய். 229)

என விளக்கம் தருகின்றார். இதன் கருத்தென்ன? இதற்கு உரை எழுதிய இளம்பூரணர், 'நிறுத்த முறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று’ என்று கூறித் 'தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழைமைத்தாகிய பொருள் மேல் வருவது’ என்கிறார். பேராசிரியரும், 'தொன்மை யென்பது உரை விராய்ப் பழைமையவாகிய கதைப் பொருளாகச் சொல்லப்படுவது’ என்கின்றார். எனவே, இவற்றால் உரைநடை பாட்டிலும் பழையது என்பது நன்கு விளக்கப் பெறும். நாம் மேலே கண்ட 'வெற்றாெலியும் உரை' யெனக் காட்டிய பரிபாடல் இவ்விளக்கத்துக்குச் சான்றாகலாம்.


உரையும் பாட்டும்

தமிழ் இலக்கியத்தில் இவ்வுரைநடை முன் தோன்ற, நெடுகாலத்துக்குப் பின் இவ்வுரைநடை போன்று அமைந்த சூத்திரங்கள்-நூற்பாக்கள்-தோன்றின. பின்னரே பாட்டுத் தொன்றிற்று எனல் பொருந்தும். பொதுவாகச் சூத்திரங்கள் உண்டான காலம் கிறித்துப் பிறப்பதற்கு