பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
167
களுக்குப் பொறும். எங்களைச் சோதனையிலே பிரவேசிப்பியாதேயும். திண்னையிலே நின்று எங்களை யிரட்சித்துக் கொள்ளும்—அமேன் சேசு.

இது ஞானோபதேசச் சுருக்கம் என்னும் நூலிலிருந்து எடுக்கப் பெற்றது. இந்நூல் பற்றிய குறிப்பு வருமாறு:— "இஃது பூர்வ முதல் வேதவிற்பன்னர்களால் தமிழில் மொழி பெயர்த்த வண்ணம் வழங்குகின்ற அநேகம் பிரதிகளுக்கிணங்கச் சரவை பார்த்துச் சுத்தப் பிரதியாக வேப்பேரியின் (தூய)அர்ச்சிய சிஷ்டபேலேந்திரர் பேரால் பிரதிட்டையா யிருக்கிற தேவாலயத்தில் எழுந்தருளியிருந்த அர்ச் ஜந்துசாயப் பிராஞ்சிஸ்டு சபைக் குருவாக ‘மிக்கயேல்' (மைக்கேல்) என்னும் மாதவ முனிவரால் செய்து இரக்ஷணிய௲௮௱௭௰௨ (1872) புதுவை சென்ம விராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக்கூடத்தில் ௩வது பதிப்பிக்கப்பட்டது'—இந்தக் குறிப்பினால் பலர் விவிலிய நூலை 1872க்கு முன் தமிழில் மொழி பெயர்த்தார்களெனக் காண்கின்றாேம். இந்த ஆண்டில் இந்நூலும் மூன்றாவது பதிப்பாக வந்துள்ளமையின், இதற்குமுன் இரண்டு பதிப்புக்கள் வெளிவந்து செலவாகிவிட்டன எனவும் காணப் பெறுகின்றது. இது 'சுத்தப் பிரதியா’ வெளியிடப் பெற்றது எனக் காணுகின்றமையின் இதற்கு முன்னிருந்தவை இன்னும் பலவகையில் பிழைபட்டும் குறைபட்டும் இருந்தன எனவும் எண்ண வேண்டியுள்ளது.

சென்ற நூற்றாண்டில் ஒரு பக்கம் நல்ல உரைநடையைக் காணுகின்ற நமக்கு இவர்தம் நூல்கள் ஏன் உயர்ந்த உரைநடையில் இலலை என எண்ணத் தோன்றுகின்றது. மேலை நாட்டிலிருந்து வந்த அறிஞர்கள் தாமே வருந்தி இந்நாட்டு மொழியாகிய தமிழைக் கற்று, தாம் புலமை எய்தியவராக எண்ணினமையின் இவற்றைத் தாமே மொழிபெயர்க்க நினைத்து இடர்பட்டிருக்கலாம். அன்றித்