பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
171
மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அபத்த மார்க்கங்களாயிருக்கின்றன வென்றுங் காண்பிக்கப்படுகின்ற திஷடாந்தங்தள்,

எனக் குறிக்கின்றர். மேலும் அவர்.

புரொடெஸ்டாண்டு மார்க்கங்களை மறுககிறதற்கு இந்தப் பிரபந்தம் செய்யப்பட்டமையால் இதிலுள்ள பொருள்களு மத்தாட்சிகளும் அந்த மதஸ்தர்களுக்கு முதலாய் மெத்ததெளிவாய் இருக்கத்தக்கதாக அவர்களுக்குள்ளே வழங்குகின்ற வேதாகமங்களின் பெயர்களும் அப்போஸ்தலருடைய நாமங்களும் இதிலே பிரயோகிக்கப் பட்டன. ஆகிலும் தெளிவுக்காக மாத்திரம் நானப்படிச் செய்ததேயொழிய புரொடஸ்டாண்டார் செய்த மொழி பெயர்ப்புகளை அங்கீகரிக்கிற துக்கல்ல.

என விளக்கம் தருகின்றார். இவ்வாறு நூல் முழுதும் பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந் நூல் அளவில் பெரியதாய் 466 பக்கங்கள் கொண்டுள்ளது. இதில் மாற்றாரை மறுக்கும் நிலையிலும் குறை கூறும் வகையிலும் உள்ள நிலை உயர்ந்த தன்று. இவ்வாறு ஒரே இயேசு சமயத்தே மாறுபாட்டுக் கொள்கையுடையார் தம்மைப் பழித்துக் கொள்ளும் நிலை எப்படி உண்டாயிற்றென்பது விளங்கவில்லை. மேற்கு ஆசியா நாடுகளின் தொன்மை வரலாறு விடை தரலாம்.

இக்காலத்தில் 'விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்' என்ற இரு சொற்களும் அதிகமாக நாட்டில்பேதப்பெறுகின்றன. விஞ்ஞான்ம் இருந்தால் மெஞ்ஞானமாகிய தெய்வநெறிவேன்டா மென்பாரும், விஞ்ஞானமே மெஞ்ஞானத்தின் அடிப்படை என்பாரும் உளர். பரந்த அண்டகோள ஆய்வினைச் செய்து அந்த எல்லையில் நம் வாழ்வின் சிறுமையையும் எளிமையினையும் விளக்கி, அதன்வழி எல்லையற்ற இறையுணர்வை ஊட்டுவன சமய நெறிகள். இந்த அடிப்படையில் கிறித்தவ