பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
172

சமயத்தில் எழுதப்பெற்ற ஒருநூலே 'அண்டபிண்ட வியாக்கியானம்' என்பது. இது, 1874இல் சென்னை இந்தியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந் நூல் பத்தொன்பதாம் நூற்றண்டுக்கு முன்பே உரோம நாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பெற்றுத் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்ற தெனினும், இதன் முன்னுரை வெளியான காலத்தில் எழுதப்பெற்றதே (1874). எனவே அந்த முன்னுரையில் ஒரு பகுதியைக் காணலாம்.

இந்நூலில் பஞ்ச பூத அமைப்புத் தொடங்கி, நிலம், கடல், பிற உயிரினங்கள் அனைத்தையம் விளக்கிக்காட்டி-அவற்றின் மாற்ற அமைப்புக்கள் அவற்றால் உண்டாகும் மாறுபாடுகள் அனைத்தை யும் காட்டிக்கடைசியில் இத்துணைப் பெரு அண்ட அமைப்பு:ஐம்பூத அமைப்பு, உயிரமைப்பு இவற். றின் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலமாய்க் கட வுள் உணர்வைக்காட்டி விளக்குதலே.

மேலும்,

அண்டமென் கிற பெரிய லோகமும் பிண்டமென்கிற சின்ன லோகமும் பரஞ்சோதியாகிய பராபர வஸ்துவினுடைய வொப்பல்லாத ஞானத்தையும் கரைகாணாத கிருபாகடாஷத்தையும் மனோ வாக்குக்கெட்டாத மேலான வல்லமையையும் அளவறுக்கப்படாத விமரிசையையும் கணக்கற்ற உபகார நன்மைகளையும் திவ்ய கீர்த்திப் பிரதாப சோபனங்களையும் சாங்கோபாங்கமான பிரகாரமாகப் பிரத்தியக்ஷமாய்க் காண்பிக்கிறதனாலே யாவரும் பராபர வஸ்துவை அறியும்படிக்கிச் சம்பூர்ண தாற்பரியமாயிருக்கிற நாம் கடவுளுக்குத் தோத்திரமாக அண்ட பிண்ட வியாக்கியானம் பண்ணத்தக்கதாக வபேக்ஷையா யிருக்கிருேம்.

என்பது நூலாசிரியர் குறிப்பாக அமைகின்றது.