பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15

ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர்.[1] வடமொழிச் சூத்திரங்களும் ஏறக்குறைய அந்த நூற்றாண்டுகளில்தான் தோன்றியிருக்கவேண்டும்.[2] எனவே உரைநடையை அடுத்து இச்சூத்திரங்கள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியமும் ஏறக்குறைய இக்காலத்திற்குச் சற்று முன்பு தோன்றிய ஒன்று என்பது அறிஞர் பலரும் ஒருசேர ஏற்றுக் கொள்ளுகின்ற உண்மையாகும் இனி, இத்தொல்காப்பியத்தின் செய்யுளியலில் உரையும் பாட்டும் உள்ள நிலைமை நம்மால் காணமுடிகின்றது. மற்றும் இத்தொல்காப்பியத்தின் வழியே இதற்கு முன்னும் பல இலக்கிய நூல்கள் தோன்றி வாழ்ந்து வந்தன என்பதையும் உணர முடிகின்றது தமிழ் மொழியின் தொன்மை பல பேரறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஒன்றானமையால், இந் நாட்டுப் பிறமொழிகளைக் காட்டிலும் தமிழில் பழங்காலத்திலேயே உரையும், சூத்திரமும், பாட்டும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி வளர்ந்து வாழ, அவற்றைத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறி இலக்கண வரம்பினை உறுதி செய்தார் எனக் கொள்வது பொருத்தமானதாகும். எனவே உரைநடை பாட்டிலும் முந்தியது என்பது தேற்றம். இனி, இது பற்றி நாம் இங்கே அதிகம் ஆராயத் தேவையில்லை; அது வேண்டாததும்கூட. இத்தகைய உரைநடையிலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்த வகையைக் காணவேண்டுவது நமது இன்றைய கடமையாகும்.


  1. The general period of Sutras (g;#37th) extends from the Sixth or Seventh Century B.C. to about the Second Century B.C. (Cambridge History of India, Vol. I, . 227).
  2. 2. The Principle ‘Dharmasutra” can hardly be dated from later than about 500 B.C. (History of Ancient India - By Prof. R.S. Tripathi in ‘A History of Sanskrit Literature’ p. 260).