பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
180


போலும் இந்நூல் உரையுடனே நின்று நிலவுதல் குறித்தும் ஒருவாறு அவ்வண்ணஞ் செய்யலாமென்று துணிந்து முயன்று வருகையில் இத்தமிழ் நாட்டிலுள்ள கல்வியறி வொழுக்கங்களான் ஆன்ற விவேகிகள் பலர் இம்முயற்சி இனிது பயன்படும் வண்ணம் தம்பாலுள்ள பழைய கையெழுத்துப் பிரதிகளை அன்போடு கொடுத்தார்கள். அவையனைத்தையும் வைக்கொண்டு ஒப்பு நோக்கி வந்தேன்.

ஒன்றுக்கும் பற்றாத சிறியேனை இம்முயற்சியிற்புகுத்தி நடாத்தி நிறைவேற்றி யருளிய எம்பெருமானது திருவருளையும் குருவருளையும் எக்காலத்துஞ் சிந்தித்து வந்திருக்கிறேன்,

கும்பகோணம்

இங்ஙனம்,

அக்டோபர் 1887

வே. சாமிநாதையன்.


புறப்பொருள் வெண்பாமாலை உ.வே.சா. 1895 முன்னுரை
பறநானூறு " 1894 "
பத்துபாட்டு " 1899 "
சிலப்பதிகாரம் " 1892 "
மணிமேகலை " 1898 "
சூளாமணி சி.வை.தா. 1889 "
வசண சூளாமணி (மாணாக்கருக்கு) " 1898 "
சிலப்பதிகாரம்-
(புகார்க் காண்டம்-வேணிற்காதை முடிய) 1772 "
தி. ஈ. சீனுவாசாச்சாரியார்.

முதலியனவும் எண்ணத்தக்கன.

உ. வே. சா. (ஐங்குறுநூறு முன்னுரை)

கையெழுத்துப் பிரதிகளைத் தேடுதல், எழுதுவித்தல், ஒப்புநோக்குதல் முதலியவைகள் முடிவில் இன்பத்தை விளைப்பவையாயினும் எதுவும் தக்க பொருளுதவியின்றி நடைபெருத இக்காலத்