பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
181


தில், அவைகளே அப்பொழுது அப்பொழுது பல வகையான துன்பத்தை விளைவிக்கின்றன. ‘அருளி . இல்லாகி யாங்கு' என்பது பொய்யா மொழியன்றாே! ஒரு பழைய நூலைப் பதிப்பித்தற்குரிய உழைப்பிலும் பொருட் செலவிலும் காலச் செலவிலும் அதனை ஆராய்தற் குரிய உழைப்பும் பொருட் செலவும் காலச் செலவும் மிக அதிகம் என்பதைப் பழகியவர்கள் நன்கு அறிவார்கள்.

திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய கண்மணி போன்ற முதல் மாணாக்கரும் பாடஞ் சொல்லுதல், செய்யுள் செய்தல், நூலாராய்தல் முதலியவற்றில் அவர்களைப் போன்றவரும் முன்பு கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ் தமிழ்ப் பண்டிதராயி இருந்தவரும் வேறு கவலையின்றி நூலாராய்ச்சியையே செய்து கொண்டு காலங்கழிக்கும்படி வற்புறுத்திக் கூறி அவ்வாறே யான் நடத்தற்குக் கரும்பு தின்னக் கூலி கொடுத்தாற் போலத் தம்முடைய அரிய வேலையை அன்புடன் எளிதில் எனக்குக் கிடைக்கச் செய்தவரும், ‘இரந்து புன் மாக்கள் தமை என்றும் துதியா வரந்தரு என் முன்னின்ற வள்ள'லுமாகிய திரிசிரபுாம் வித்துவான் ஸ்ரீ தியாகராச செட்டியார் அவர்களுடைய அன்புடைமை எழுமையும் மறக்கற் பாலதன்று. அவர்கள் செய்த மேற்கூறிய அரிய உதவி இல்லையேல் எனக்கும் பழைய தமிழ் நூலாரய்ச்சிக்கும் இக் காலத்தில் யாதோரியையு மின்றென்பது திண்ணம். ஆதலால், இனியதும் அரியதுமான இந் நூற் பதிப்பை அவர்களிடத்திலுள்ள நன்றி யறிவிற்கு அறிகுறியாக அவர்கள் பெயருக்கு உரியதாக்குகின்றேன்.
ஐங்குறுநூறு-பழைய உரை (1903)

இதுபோன்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் மகா மகோபாத்தியாய-டாக்டர் - உ. வே. சாமிநாத ஐயர்