பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
194

வாக்கியம்’ என்ற நூலினைத் தொகுத்தார். அதைக் கண்டு முன்னுரை தருமாறு தொல்காப்பியம் வரத முதலியாரைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதிய கடிதம் ஈண்டுத் தரப்படுகிறது. இஃது அந்த நூலிலேயே இடம் பெற்றுள்ளது. நூல் 1844 இல் தொகுக்கப் பெற்றது. 'வித்துவான்களின் அபிமதம்’ என்ற தலைப்பில் அந்நூலைப் பாராட்டிய பலர் தம் முன்னுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இக்கடிதமும் ஒன்று.

மஹாராஜஸ்ரீ தொல்காப்பியம் வரத முதலியாரெழுதிய கடிதம்:—காலேஜ் புத்தக பரிபாலகராகிய ம-ா-ஸ்ரீ பிள்ளையவர்கள் கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளையவர்கட்கு.

விஞ்ஞாபனம்-இந்த நீதிசாரமென்னுஞ் சிறந்த வசன புத்தகம் எனது அபிமதம் பெறவேண்டுமென்கின்ற கோரிக்கையா லென்னித்திட கனுப்பப்பட்டபடி அதை முழுதும் வாசித்துப் பார்க்கும்மிடத்திற் சொன்னயம் பொருணய மிகவும் நன்றாமைந்திருப்பதுவுமின்றித் தர்மங்களை யெல்லாஞ் சேகரித்து விளங்கவெழுதி யிருக்கின்றபடியால் இஃது சிறுவர்கட்கு மாத்திரமேயல்ல, பெரும்பான்மையானவர்க்கும் பிரயோஜனமாக விருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை யென்று தோன்றுகிறது. மேலும் இதிலடங்கிய வசனங்களெல்லாம் கம்பீரமாயிருக்கின்றமையால் வாசிப்பதற்கு மிகுந்த களிப்பைத் தருகின்றது. இப்புத்தகத்தில் தர்ம நீதிகளெல்லாம் வசன வடிவு கொண்டு வெளிப்பட்டமையால், அவைகள் பாவினங்களைப் பார்க்கிலும் சிறந்து விளங்குகின்றன. ஏனெனில், பாக்களிலிருக்கும் தர்மா சாரத்தையுணர்வது சாதாரணர்க்குக் கடினமாக விருக்கின்றமையினலேதான். ஆதலால் நம்முடைய தேசத்தி னெடுங்காலமாய்க் குடிகொண்டிருக்கும் அழுக்காறு முதலிய துற்குணங்களைப்