பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
203

உடையது. ஒவ்வொரு அதிகாரமும் பல உட்பிரிவுகள் கொண்டது. இலக்கிய மரபியலில் திருமுறை யிலக்கியங்கள் சங்க ஞான்று அவதரித்தல் பற்றியும், அவை யெல்லாந் திருவருள் ஒத்துக்களாதற் பற்றியும் அவற்றின் சிறப்பு, வரலாறு முதற்கண் தந்து சொல்லுதும். தேவாரந் திருவாசகம் திருக்கோவை திருவிசைப்பாத் திருப்பல்லாண்டு திருமந்திரந் திருமுகப் பாசுரம் முதலிய நாற்பான் பிரபந்தங்களென்னும் இவை தம்மை அபயகுலசேகர சோழவரசர் பெருமான் வேண்டித் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாக வகுத்தார். ஆரிய நான்மறை உபநிடதங்களும் தமிழ் வேதம் முதலிய திருமுறைகளும் மொழியான் வேறுபடினும், பொருளான் ஒற்றுமையுடைய சுருதிகளாம். அது.

"தேவர் குறளும் திருநான்மறை முடிவு
மூவர் தமிழு முனிமொழியுங் கோவை
திருவா சகமுந் திருமூலர் சொல்லு
மொரு வாசக மென்றுணர்

என்னும் ஒளவை வாக்கால்

உணரலாம். தமிழ் வேதம் முதலிய திருமுறைகள் ‘திருச்சிற்றம்பலம்’ எழுவாயாகவும் இறுவாயாகவும் ஓதற்பாலன. ஏன்? திருச்சிற்றம்பலம் பிரணவ உறையுள். யாங்ஙனம்? இச்சரீரம் பிரமபுரம், பிரமம்-பரமான்மா. ஆன்மாவின் இச்சை, அறிவு, தொழில்களுக்கு பரமான்மா அவசியம். அம்பரம்-சித்து, இது சிதம்பரம், இதுவே தில்லைத் திருச்சிற்றம்பலம். இது பர மாதாரப் பொதுவாதலின் திருச்சிற்றப்பலம் பிரணவ உறையுளாகும்.

12. பெரிய புராண வசனம், ஆறுமுக நாவலர்: ஸ்ரீமுக. பெரிய புராணத்தில் சொல்லப்பட்ட 63 நாயன்மார்கள் திருவவதாரத்திற்கு முன்பே அவர்கள் வரலாறு