பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
204

பரமேதி காசமாகிய சிவ ரகசியத்திலே ஒன்பதாம் அமுசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு சொல்லியவர் சிவபெருமானே! அதனைக் கேட்டவர் அருட்சத்தியாகிய பார்வதிதேவியாரே! சாதியினும் சமயமே அதிகம். அதை மறுத்தல் சுருதி, யுத்தி, அநுபவம் மூன்றுக்கும் முழுமையும் விரோதம். உலக வழக்கில் உள்ள சாதி போலச் சைவசமயத்திலும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என ஐவகைச் சாதிகள் உள்ளன. சிவஞானிகள் முதற்சாதி, சிவயோகிகள் இரண்டாம் சாதி, சிவக்கிரியாவான்கள் மூன்றாம் சாதி, சிவாசரியவான்கள் நான்காம் சாதி, இந்நெறியில் வாராது, இவர்களை நிந்தித்து இந்நெறி பிறழ்ந்து நடப்போர் ஐந்தாம் சாதி, சைவசித்தாந்த நூல்களாகிய சிவஞான நூல்களை ஓதிப் பதி பசு பாசம் என்னும் திரிபதார்த்தங்களின் இலக்கணத்தையறிந்த ஒரு சைவருக்கு யாரும் சமமாகார். அறுபத்து மூன்று நாயன்மார்கள் குருவருளால் பன்னிருவரும், சிவலிங்கத்தால் முப்பதின்மரும், சிவனடியாரை வழிபட்டு பத்தொன் பதின்மரும் முத்தி பெற்றுள்ளனர்.

13. மெஞ்ஞான பானு: சபாபதி முதலியார் 1891

மெய்ப்பொருள் கூறுதலானும், இதுவோ அதுவோ பொருள் என்னும் மயக்கரு விருளை ஒழித்தலானும், இரு சிறந்த புலவர்களால் எழுதப்பட்ட ஞானபோத விளக்கம் ஞான சூடாமணியென்னும் உரைகளாகிய விளக்கினொளியும், மணியினொளியுந் தன் பேரொளியினடங்குமாறு கோடலானு மிவ்வுரை மெஞ்ஞானபானு என்னும் பெயர்வுடைத்தாயிற்று. ஞானத்தைப் பகுத்தல், பயனே இம்மை, மறுமை, எனவிரண்டையும். இம்மை, உம்மை, அம்மை என மூன்றாயும். அறம், பொருள், இன்பம், வீடு என நான்காயும், முத்தியைப் பரமுத்தி, பதமித்திஎன இரண்டாயும், சாலோக சாமீப சாரூப சாயுச்சியம் என நான்காயும் வகுப்பது போல்வது.