பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
207

18. நித்திய ஒழுக்கம் என்னும் உலகில் 1. சாதாரண கித்திய கரும விதி. அருட்பெருஞ்சோதி.

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து விபூதி தரித்துச் சிறிதுநேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானம் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தை யெல்லாம் உட்கொள்ளல் வேண்டும், பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும், பின் மலஜல வுபாதிகளைக் கழித்தல் வேண்டும்.

19. குறள் மூலமும் சுகாத்தியர் (Scott) இயற்றிய கறாத்துர யட்டவணயும் பொழிம்புரயும் இதிலச்சிடலாயிற்று.

printed at the Lawrence Asylum Press,
Mount Road, Madras.
By G. W. Taylor, 1899
உரயாசிரியர் கோட்பாடு

வடமொழி எழுத்தாகிய ஐ, ஒள எனப்படு மெழுத்துக்கள் தமிழில் காரணமின்றிச் சேர்த்துளவாதலாலும் அவற்றுள் (ஒள) இந்நூலுளெவ்விடத்தும் வரப் பெறாமயாலும் (ஐ)க்கு வடமொழிக் குரிய வரிவடிவமொழித் துத் தமிழ் முறய மயக்கிணங்க அகர யகர வடிவடிவாகவும் ககரவோசயய்த் தழுவி முப்புள்ளி வடிவினதாய் வழங்கிய ஆய்தவெழுத்துத் தமிழோசய்க்கு வேண்டு வதின்மயா லதற்குரித்தான ககர வடிவாகவும் வரய்த லாயின.

திருவள்ளுவநாயனாரிந் நூலிலருளிய பயனய்உலகி லுள்ளாரெல்லாம் அடைந்துய்யுமாறு பதிகங்களய் முறப்ப் படுத்தி அவற்றின் கருத்து விளங்கும்படி யிட்ட பெயர்ப் பொருளதிகார வுரயிற்றுலக்கி எதுகய்