பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
208

மோனய்வழுக்களைக் களப்ந்து ஒவ்வொரு திருக்குறளின் சிறந்த பொருளுயுந் தோன்றத் தந்து செந்தமிழ் ஆதிமுறைப்படி வரய்ந் தச்சிற்பதிப்பித்தனம்.

மதுரய்

இங்ஙனம்,

கி. ஆ. 1889௵

சுகாத்தியர்.

20. இஸ்தியார் நாமா:

14–8–37.


சகலமான ஜனங்களுக்கும் தெரியப்படுத்துவதுவ தென்னவென்றால்,

மஞ்சவாடி கணவாயின் பேரில்-போகுற பாட்டை யிப்போ முடிவாயிருக்குது மேலும் சேலத்திலிருந்து திருப்பத்தூருக்குப் போகு மார்க்கம் முழுதிலும் பாட்டை நன்றாய் செய்யப்பட்டிருக்கிறது.


இதனால் அறிவிக்கிறதென்னவென்றால்,பட்டணத்தில் எடுக்கப்பட்ட குப்பைகளை-ஒரு வருஷ கால வரைக்கும்-விற்பனை செய்துக் கொள்ளும்படியான தற்காஸ்து காகிதங்களை-வருகிற செப்டம்பர்௴ மாதம் ௱௨௨ வரைக்கும் (Jastice in session) கெஷ்ட்டயிசு செஷன் துரையவர்கள் வாங்கிக் கொள்வதற்குச் சித்தமாயிருக்கிறார்கள்.

1837 ஆகஸ்டு ௨௰௨

உத்திரவின் பிறகாரம்.