பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24

ஒருவர் கேட்டுக் கேட்டு—ஆறு நூற்றாண்டு எல்லையை மெல்லக் கடந்து—எட்டாம் நூற்றண்டில் ‘இறையனர் களவியல் உரை’ என்ற பெயரொடு உலகில் உருப்பெற்றது. தமிழ் உரைநடையை விளக்கவே அந்நூல் எழுந்ததோ என்னும் அளவில்தானே அது அமைகின்றது! இரண்டடி நூற்பாவிற்குப் பல பக்கங்கள் உரை விளக்கங் காணப்பெறுகிறோம். அது பற்றிய ஆய்வு இங்கே நமக்கும் தேவையில்லை. அந்த உரைநடையின் அமைப்பையும், போக்கையும், அழகையும் கண்டு மேலே செல்லலாம்.

தலைமகள்—பல நூறு தோழியரோடு கூடி வாழ்ந்த தலைமகள் —எப்படித் தமியளாய் நிற்கின்றாள் என்பதை விளக்கும் நக்கீரர் நாநலம் காண நலம் பயப்பதாகும்.

யாங்ஙனம் நிற்குமோவெனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலாவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மெளவலொடு மணங் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் கொன்றையும் பிணி யவிழ்ந்து, பொரிப்புன் கும்புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து, வண்டறைந்து தேனோர்ந்து வரிக்குயில்கள் இசைபாட, தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் ஒரு பொழிலது நடுவண்; ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல், விசும்பு துடைத்துப் பசுப்பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்தேன் துளிர்ப்பதோர் வெறியுறு நறிமலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடி மேல் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலர் அணிக்கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறைவிரி வேங்கை நாண்மலர் கொய்தாள்; கொய்தவிடத்து மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போது