பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23

நாச்சினர்க்கினியர் முல்லைப்பாட்டிற்கு விளக்கங்கூற வந்தகாலை,

‘இப்பாட்டிற்கு முல்லையென்று பெயர் கூறினார், முல்லை சார்ந்த கற்புப் பொருந்தியதனால், இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்த லென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையின், கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று. ‘தானே சேறல்’ (தொல். அக. 27) என்னும் வழியால், அரசன் தானே சென்றது இப்பாட்டு’

என விளக்கங் காட்டுகின்றார். இவ்வாறே, அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் கூறிய உரை விளக்கங்கள் பல. வேறுபல உரையாசிரியர்களும் அக்காலத்தில் பல்வேறு நூல்களுக்கு உரைகள் எழுதித் தமிழ் உரைநடையை வளர்த்தனர் எனல் பொருந்தும். இத்துறையில் இன்னும் விரிப்பிற் பெருகுமாதலால் மேலே செல்லலாம்.

கல்வெட்டின் உரைநடை

இருபதாம் நூற்றண்டின் பல ஆராய்ச்சிகளுள் ஒன்று பழமையைத் துருவி ஆராய்தல். தமிழ்நாட்டுப் பழைய வரலாற்றை அவ்வாறு துருவி ஆராயப் பயன்படுவதற்கு மிக்க உதவியாக இருப்பன இடைக்காலத்தில் உண்டான கல்வெட்டுக்களே யாகும். கல்மேல் வெட்டப்பட்டு இன்றளவும் வாழ்கின்ற அவ்விலக்கியங்களை ஆராய்ந்து இன்று வெளியிடுகின்றனர். அவை பாட்டும் உரையும் விரவியனவாகவே அமைந்துள்ளன. தமிழ் நாட்டுப் பல்வேறு பகுதிகளிலும் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முற்பகுதி அவ்வக் காலத்து அரசர்தம் புகழ் பரப்பும்