பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30

மெய்க்கீர்த்திகளா யமையப் பிற்பகுதிகள் பெரும்பாலும் அறமாற்றும் நிலையை விளக்குவன. முற்பகுதி பெரும்பாலும் அகவற் பாக்களால் அமைய, பிற்பகுதிகள் உரைநடையாகவே உள்ளன. தமிழ் நாட்டில் படி எடுத்த கல்வெட்டுக்கள் சில; எடுக்க வேண்டுவன பல. எனவே, தமிழ் உரைநடை, செவிவழியாக வந்து, ஓலை ஏட்டிலேயும் உதட்டிலேயும் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட தோடமையாது, என்றும் நிலைபெறும் கல்லிலும் தன் வாழ்வை அமைத்து, அக்கற்களையே தன் புகழ் பாடும் கவிக் கூடங்களாக மாற்றிக் கொண்டது. மிகப் பழங்காலந் தொட்டு வந்த இந்த வழக்கம் பிற்காலச் சோழர் பாண்டியர் காலத்தில் மிகுந்த உச்ச நிலையில் இருந்தது. நாம் காண இருக்கும் கால எல்லையிலும்—ஏன்? இன்றும் கூடக் கல்லில் உரைநடையையும் பாட்டையும் செதுக்கிப் பரப்பும் நிலையைக் காணுகின்றோம். சோழ பாண்டியர் காலக் கல்வெட்டுக்களில், அவற்றின் உரைநடை நலத்தைக் கண்டு மேலே செல்லலாம். இது சற்றே புதியதாகவும் மாறுபட்டதாகவும்கூடத் தோன்றும்.

‘ஸ்ரீ திருபுவநச் சர்கிர விற்த்திகள் ஸ்ரீ ராச ராச தேவருக்கு யாண்டு பதினாறாவதற்கெதிராம் ஆண்டு நாள் இருநூற்றெழுபத்திரண்டு காங்கய ராயனும் திருமஞ்சனம் அழகியனும் தென்னவன் பிரமராயனும் ஆளுடையயையனாயனாற்ற் கோவிலுக்கு ஸ்ரீ காரியம் செய்வார்களும் சமுதாயம் செய்வாற்களும் கோவில் நாயகம் செய்வாற்களும் சமுதாயம் செய்வாற்களும் செய்யத் திருவாய் மொழிந்தருளினபடி, உய்யக்கொண்டார் வள நாட்டு அம்பர் நாட்டு அம்பாருவந்தை அரயன் சிவேத வன பெருமானை தொண்டமான் பெரும் பெற்றப் புலியூற் முடித்தலைக் கொண்ட பெருமாள் திருவீதி மேலைத் திருவீதி கீழைச் சிரகில் யெடுப்பித்த அறப் பெருஞ் செல்வி சாலையில் உண்ணும் ஆதுலற்கு அரிசியும் கறி விறகு உள்ளிட்ட விஞ்சனத்துக்கும் அடுவார்த் தண்ணீர் வார்ப்பாற்க்குஞ் சாலை அழுவு கொரவும்