பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36

பூண்டு உயர்ந்தார் என்ற நிலையில் பிறர் நினைக்க வாழ்ந்தனர். எனினும் அவர்கள் ஏழைகளோடு கலந்து உறவாடி நின்ற காரணத்தாலேயே அவர்தம் சமயத்தைத் தாழந்த மக்களிடம் பரப்ப முடிந்தது. அவருள் தத்துவ போதகர் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (20-5-1605) இந்நாட்டுக்கு வந்தார். அவர் செய்த தொண்டுகள் பல அவை பற்றிய ஆய்வு நமக்குத் தேவையில்லை. அவர் எழுதிய உரைநடை நூலுள் ஒருசிலவற்றை எண்ணலே சாலும். அவர், ஞான உபதேச காண்டம், ஆத்தும நிர்ணயம், புனர்சென்ம ஆக்ஷேபம், தூஷணத்திக்காரம், நித்திய சீவன சல்லாபம், ஞானதீபிகை, போதக பரீட்சை, ஞான சங்க்ஷேபம், விசுவாச சல்லாபம், உபதேச சல்லாபம், பத்துச் சல்லாபம், சிலுவையின் விசேஷ சல்லாபம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றின் பெயர்களைக் கொண்டே இவர்தம் உரைநடை எந்தவகையில் அமைந்திருக்கும் என்பதை ஓரளவு உணரமுடியும். எனினும் ஓரிரு மேற்கோள்களைக் கண்டு செல்லலாம். இவர் தம் நூல்களுள் சில பத்தொன்பதாம் நூற்றண்டிலும் (ஆத்தும நிர்ணயம் 1889; அக்கிலான நிவாரணம் 1891) சில இந்த நூற்றாண்டிலும் அச்சாகியுள்ளன. இப்பெரு நூல்களைத் தவிர்த்து அவ்வப்போது அமைந்த சிறுசிறு துண்டுப் பிரசுரங்கள் போன்ற பல சிறு உரைநடைத் தாள்களும் எழுதியுள்ளார் என அறிகின்றாேம் இவர் நூல்களிலும் இக்காலத்தில் வேறு சில நூல்களிலும் மாற்றுச் சமய மாறுபட்ட கருத்துக்கள் மலிந்துள்ளமை காண்கின்றாேம். இந்த அடிப்படையில் 17ஆம் நூற்றண்டில் பல உரைநடை நூல்கள் வளர்ந்துள்ளன. அவர் உரைநடைக்கு ஓரிரு சான்று காணலாம்.

பிற மதத்தினர் தூஷணங்களை மறுக்கும் வகையில் அமைந்த நூலே ‘தூஷணத் திக்காரம்’ என்பர். இந்நூலில் பல சொற்களின் வழக்குகள் நமக்கு விளங்காதனவாகக் கூட உள்ளன. அவற்றின் ஆய்வு நமக்குத் தேவையில்லை அதிலிருந்து அவரது உரைநடைக்கு ஒரு சிறு மேற்கோள் மாட்டும் காணலம். அவர் நடையில் வடமொழிக் கலப் பு