பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41

கஷ்டம்-மலம்;கட்டு வர்க்கம்-ஆடை அணிகலன்; சஞ்சிதம்-புதையல்; சபலம்-பயனொடு; சரப்பளி-தங்கச் சங்கிலி; சூசனை-போதனை, சைக்கம்-மென்மை; தப்பளை-தவளை; தரும சரித்திரம்-நற்செயல்; தாவடம்-கழுத்தணி, துரிதம்-துன்பம்; பத்துப்பத்தாய்-கவனமாய், பறங்கி-போர்த்துக்கீசியர்; பள்ளுவிலி-ஒரு சாதி (யாழ்ப்பாணம்) பிரமாணிக்கம்-ஒழுங்கு பூர-புக: பூத-புக; பூதிலம்-பூமி; போரும்-போதும்; மச்சியம்-மீன்; மொக்கிஷம்-மோட்சம்; வங்காரம்-பொன்; வர்ச்சித்து-விலக்கி; வருந்து-முயற்சி செய்; வித்துவாங்கிஷர்-கவிஞர்; விரத்தர்-பிரமச்சாரி, வைதுஷ்யம்-கல்வி; லாவகம்-எளிமை; லேக்கின்-எழுது வோன்; லேகினி-எழுதுகோல்; க்ஷூதிக-கெட்ட).

இனி, அத் தத்துவ போதகர் தம் பிரசங்கம் ஒன்றனை இங்கே காட்டி அமையலாம் என எண்ணுகிறேன்.

‘இற்றைவரைக்கும் சொல்லப்பட்ட பிரசாரங்களிலே சர்வேசுவரன் உண்டென்றும், ஒருத்தராய் இருக்கிறாரென்றும், தானாய் அனாதியாய் சரீரமில்லாமல் இருக்கிறாரென்றும், அளவில்லாத சகல நன்மையாய் இருக்கிறார் என்றும், ஞானத்தினலேயும், பெலத்தினலேயும், காரணமாய் எங்கும் நிறைந்திருக்கிருரென்றும் வெளிப்படுத்தினோம். இந்த பிரகாரமாய் இந்தப் பிரசங்கத்திலே சர்வேசுரன் எல்லாத்திற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார் என்று வெளிப்படுத்துவோம்.

‘அதெப்படியென்றல், பரமன் பலத்தையும், பூலோகத்தையும் அதுகளில் உண்டாயிருக்கிற சகல வஸ்துக்களையும் சகலத்துக்கும் வல்லவராயிருக்கிற சர்வேசுவரன் உண்டாக்கினாரென்கிறது அவர் எல்லாத்திற்கும் ஆதி காரணமாயிருக்கிறார் என்கிறதுக்கு... இதிலே சர்வேசுரனைவர் இந்த உலோகத்தை உண்டாக்கினர் என்றும் அதை