பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43

காப்பியன்’ என்ற தென்னை எனின், அகத்தியம் நிறைந்தமை எல்லாராலும் தெளியப்பட்டமையின், வடமொழியிலும் வல்லவனாயினான் என்பது விளக்கிய அங்ஙனம் கூறினர் என்பது. இவ்வாறு அன்றி ஐந்திரத்தின் வழித் தோன்றிய நூல் என்பது விளக்கிய ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனவே, ஐந்திரம் முதல் நூல் என்று அமைந் திருப்ப முந்து நூல் கண்டு எனக் கூறியது எற்றுக்கு எனவும் கூறி மறுக்க.[1]

இவர் தம் திராவிட மாபாடியத்துக்கு ஒரு சான்று வேண்டாமா? இதோ கேளுங்கள்:

மறைப்பாவது, அநாதியாய மூலமலத்தின் காரியமாகலின், அது முதல்வனாற் செய்யப்படுங் காரியமென்பது என்னையெனின், கூறுதும்-; முதல்வனாவான் முற்றுணர்வுடைமையின், உலகத் துயிர்கள் படுந்துன்ப முழுவதும் உணர்ந்தோனாகியும், பேராற்றலுடைமையான், உயிர்களையெல்லாம் ஒருங்கே வீடு பேறடைவிக்க வல்லவனாகியும், சிவன், சங்கரன் முதலிய பெயர்களாலும் அறியப்படுவதாய், விருப்பு வெறுப்பின்றி, எல்லா உயிர்கண் மாட்டும் ஒப்ப நிகழ்வதாய், தொடர்பு பற்றாது. பிறர் துன்பங்கண்டுழி அதனை அக்கணமே நீக்குதற்கு விளையும் மனவெழுச்சியாகிய பெருங் கருணையுடைமையான், அவற்றை ஒருங்கே வீடு பேறடைவித்தற்கண் ஒருப்பாடு மிக்குடையனாகியும் இத்தன்மைகளெல்லாமுடைய இறைவன் உயிர்களால் அனாதிமுதல் ஈட்டப்பட்டுப் பல்வேறு வகைப்பட்ட துன்பங்களையெல்லாம் விளைவிக்கும் வினை வலியினையும், எல்லாப் பெருங்கொடுமைக்கும் மூலமாகிய சகச மல சக்திகளையும் அவற்றன் பெறுந்துன்பங்களையும் கெடுத்து, எல்லா உயிர்களையும் ஒருங்கே வீடுபேறு அடைவியாமைக்குக் காரணம்


  1. தொல், பாயிர விருத்தி, பக். 8.