பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49

பிரெஞ்சுக்காரரும், அங்கிலேயரும் ஒருவர்பின் ஒருவராக வாணிபத்தின் பொருட்டு இந்நாட்டில் கால்வைத்து, பின் தம் வளம்பெருத்கி, பிறகு ஆட்சியையே இங்கு நிலை நிறுத்தப் போட்டியிட்டனர். மேலும் கிறித்தவ சமயம் பரப்ப வந்த பாதிரிமாருள் பலர் தமிழ் நாட்டில் வந்து பல்வேறு இடங்களில் தங்கி, அவர்தம் சமயம் வளரத் தக்க வகையில் பாடுபட்டனர் என்பதையும் முன்னரே கண்டோம். அவர்களுடன் புதுவகையான சாதனங்களும் வளரலாயின. ஓலையில் எழுதிய நிலைமாறிக் காகிதத்தில் எழுதவும், காகிதத்தில் அச்சடிக்கவும் தக்க பல்வேறு வசதிகள் உண்டாயின. நாட்டுப் பொருளாதார, சமுதாய, அரசியல் வாழ்வு முறைகளிலும் பல்வேறு வேறுபாடுகள் உண்டாயின. நில அளவை, மக்கட் பிரிவு முதலியவற்றிலும் சில வேறுபாடுகள் உண்டாயின. தமிழ் நாட்டில் இன்னும் உண்டான மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! இவற்றுக்கிடையில் அரசாங்கத்தாரும் சமயத் தலைவர்களும் சமுதாய அமைப்பாளர்களும் பிறரும் தத்தம் கொள்கை, சமயநெறி, வாழ்வியல், அரசியல் முதலியவற்றை மக்களிடையே பரப்ப முயன்றனர். அந்த முயற்சிக்கு இந்நாட்டு மொழியே அடிப்படைத் தேவையாக அமைந்தது. பிற நாட்டு அரசாங்கம் கால்கொள்ளத் தொடங்கிய அந்நூற்றாண்டின் தொடக்கத்திலே மக்கள் தம் தாய் மொழியாகிய தமிழிலேயே அவருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. அதற்குப் பாட்டு நன்கு பயன்படவில்லை; உரை நடையே உற்றுழி உதவிற்று. எனவேதான் சென்ற நூற்றாண்டில் உரைநடை தமிழ்நாட்டில் அதிகமாக வளரத் தொடங்கிற்று. மேலும் கல்வி முறையும், கதை எழுதுதல், நாளிதழ், கிழமை, திங்கள் வெளியீடுகள் முதலியன அச்சிட்டு மக்களிடை அறிவைப் பரப்பும் நல்லியக்கமும் பத்தொன்பதாம் நூற்றண்டில் நன்கு வளர்ச்சியடைத்தமையைக் காண்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயும் பல உரைநடை நூல்கள் எழுந்தன. பண்டைத் தமிழ் இலக்கியங்களை உலகுக்கு உணர்த்தப் பல நூல்களுக்கு-சிறப்