பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
51

தான். கிராமங்களில் ‘நாட்டுக் கணக்கு’ அமைக்க அவன் உண்டாக்கிய கிராம முனுசீப், கணக்கப்பிள்ளை அமைப்பே இன்றளவும் வாழ்ந்து வருகின்றது. நாட்டில் பல பாகங்களிலும் நில அமைப்பு, நிலப்பிரிவு, நிலதானம் அளித்து வரையறுத்தல் ஆகிய பல சீர்திருத்தங்கள் அந்த நூற்றண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கம்பெனி ஆட்சியாளரால் ஏற்றுச் செயலாக்கப்பெற்றன. அக்காலத்தை ஒட்டியும் அதற்குமுன் ஆண்ட விசயநகர, நாயக்க மன்னர் ஆட்சியை ஒட்டியும் அதுவரை நாட்டில் காணப்பெறாத நானாவித சாதிகள் நாட்டில் உண்டாயின. அவை பற்றிய வரலாறு முதலியனவும் தமிழ் உரைநடையில் எழுதப் பெற்றுள்ளன.

வந்தவர் கற்றனர்

வந்தவருள் பிற நாட்டவராகிய ஆங்கிலேயர் இந்நாட்டை ஆளத் தொடங்கும்போது ஓர் உண்மையை உணர்ந்தனர். முதலில் ‘நாட்டு மக்கள் தாய் மொழியிலேயே தம் வழியை அமைத்துக் கொள்ளலே நல்ல வழி’ என அவர்கள் உணர்ந்தனர், சமய வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து உணர்வார் கண்ட முடிவும் அதுதானே.[1] இந்த அடிப்படையில் ஆளவந்த ஆங்கிலேயர் மட்டுமின்றி, சமயம் பரப்ப வந்த சமய போதகர்களும் தம் செயல்களையும் எழுத்துக்களையும் தமிழரோடும் தமிழோடும் இணைத்துக் கொண்டனர். இவ்வுண்மையைப் பதினேழாம் நூற்றாண்டில் சமயப் போதகராக வந்த தத்துவ போதகர் (Robert de Nobili) வாழ்வைக் குறிக்கும்போது, மறைத் திரு ச. இராசமாணிக்கம் அவர்கள் குறித்துள்ளார்கள்.


  1. (a) The Conquerors continue, for generations, to speak their language, but find it more and more necessary to use also to that of conquered (Language, Bloomfield, P. 463)
    (b) The application of western methods of study to oriental literature had an intensely stimulating effect (India-By H. C. Rowlingdon, P. 406).