பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57

1761 இல் புதுவையில் அச்சகம் தோன்றிற்று. சென்னையில் புதிதாக 1786 இல் வேப்பேரியில் அச்சகம் உண்டாக அதில் சென்ற நூற்றாண்டில் பல உரைநடை நூல்கள் அச்சாயின. அக்காலத்திய அச்செழுத்துக்கள் 1870 வரை வழக்கத்தில் இருந்தன. இதன் வளர்ச்சி அடிப்படையை ஆராயின் சென்னை மாநிலத்தில் சென்ற நூற்றாண்டில் சுமார் இருநூறு (198) அச்சகங்கள் இருந்தன எனக் காண ழுடிகின்றது. தனியார் மட்டுமின்றி அரசாங்கச் சார்பான குறிப்புகள் முதலியவற்றை அச்சிட, அவர்களும் அச்சகங்கள் அமைத்தமை அறிகிறோம். அவ்வச்சகங்களையும் அவற்றின் வழி வெளி வந்த இதழ் தூல்களையும் பற்றி ஆராய 1878 முதல் 1900 வரை இரகசியத் தனிக் குழுக்கள் (C. I. D.) இருந்தனவாம். இவைபற்றி யெல்லாம் சிறு நூல்களும் ஆய்வுகளும் தற்போது வெளிவருகின்றன.[1]

இதழ்கள்

இந்த அச்சக அடிப்படையில் பல்வேறு இதழ்களும் செய்தித்தாள்களும் சென்ற நூற்றண்டில் வெளி வந்தன. தமிழில் இருபதுக்கு மேலான இதழ்கள் இருந்தன. அரசாங்க இதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தமிழ் முதலிய இந்நாட்டு மொழிகளிலும் விளக்கம் தந்தன. அவ்வப்போது உண்டான சட்டங்கள், விதிகள், விளக்கங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளார்கள்.முதலில் இதழ்கள் வெறும் செய்திகள் மட்டும் தாங்கி வெளிவந்தன. 1775 இல் முதல் முயற்சி நடைபெற்றது. பிறகு முதல் இதழ் சர் ஆர்சிபால்டு காம்பல் (Sir Archibald Compball) கவர்னராக இருந்த காலத்தில் (1786—1789) பெரும்பாலும் ஆங்கிலமும் ஓரளவு தமிழும் கொண்டு வெளிவந்தது[2](இந்தியா


  1. The Printing Press in lndia By Anant Kakba Biolker (Bombay).
  2. Madras Courier in I785.

4