பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
65

இவற்றுள் சில ஆங்கில நாட்டு ‘இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி’ (Royal Asiatic Society) யினரால் பெயர்க்கப் பெற்று வெளியிடவும் பெற்றுள்ளன. இத்தொகுப்பைப் பற்றி ‘மார்க் வில்க்ஸ்’ என்பார்.

The collection gives all that is necessary to illustrate the antiquities, the civil, military and religious institutions and ancient History of South India.

(Col. Mark Wilks-History of Mysore)

என்று பாராட்டியுள்ளார். ரெவரெண்டு வில்லியம் டெய்லர் (Rev. William Taylor) முதலிய பலர் அவற்றை ஆராய்ந்து அடிக்கடி ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வு நூல்களும் வெளியிட்டனர். அவற்றுள் 1837-38 இல் சில தொகுக்கப் பெற்றன. பிறகு 1858இல் ‘கிழக்கிந்திய மனை’யும் (EastIndia House) பிரவுசு மனுஸ்கிரிப்ட்சுடன் (BrownesManuscripts) தொடர்பு கொள்ள இந்த 'மெக்கன்சி சேர்க்கை' (Collection) வெளிவந்தது. சென்னை அரசாங்க உடைமையாக (1847) ஆன பிறகு, 1882-ல் இத்தொகுதி கீழ்த்திசைக் கையேட்டுப் பிரதித் தொகுப்பில் இடம் பெற்றது. அக்காலத்தில் அதில் 8,000 வகைகள் இருந்தனவாம். மெக்கன்சி அவர்களே இத்தொகுப்பைக் கொண்டு வரத்தாம்பட்ட பாட்டைக் கூறுவதைக் காணலாம்.

“From 1792 to 1799 it were tedious to relate the difficulties, the accidents and the discouragements that impeded the progress of this design. The slender means allottted from the necessity of a rigid, no doubt just, economy, the doubts and hindrance ever attendant on new attempts; difficulties arising from the nature of the climate of the country, of the Government, from conflecting interest and passions and prejudices, difficult to contend with, and unpleasant to recollect.”