பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
71

காண இயலவில்லை. இவர்தம் முயற்சியால் காணக் கூடிய வகையில் உள்ள நூல்களுள் பெரும்பாலான உரைநடை நூல்களே. எனவே சென்ற நூற்றாண்டின் உரைநடையைக் காண இவர் தம் தொகுப்பும் நன்கு பயன்படத் தக்கதாகும்.

அரசாங்க நூற்பதிவுச் சட்டம்

1867க்குப் பிறகு அன்றைய அரசாங்கத்தார் அச்சுச் சட்ட அடிப்படையில், நாட்டில் அச்சாகும் நூல்களில் ஒவ்வொன்றின் படியும் அரசாங்கத்திற்கு (Registrar of Books) அனுப்பிவைக்க வேண்டுமென ஆணையிட்டனர். எனவே சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான நூல்கள் அனைத்தும் அரசாங்க முத்திரையைப் பெற்று, வரிசைப்படுத்தப் பெற்று வகையாக எண்ணிடப் பெற்றுச் சேர்த்துவைக்கப் பெற்றன. அண்மையில் தமிழ் நாட்டு அரசாங்கத்தார் அவற்றைத் (1867–1900) தொகுத்து மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பிலும் பல உரைநடை நூல்கள் உள்ளன. எனவே சென்ற நூற்றாண்டில் வளர்ந்த தமிழ் உரைநடை வளர்ச்சியை இடையீடின்றி ஆராய இவையும் இவை போன்ற வேறு சிலவும் நமக்கு ஆதாரமாக உள்ளன.[1] அவற்றின் துணை


  1. 1. A catalogue of the Tamil Books in the library of the British Museum.
    2. Classified catalogue of the Public Reference Library Published by Registrar of Books, 1894.
    3. Tamil Manuscripts in the Tanjore Maharaja Serfoji’s’ Saraswathi Mahal Library-comiled by Loganatha Piai.
    4. A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Manuscripts Library by M. Rangacharya, 1912.
    An Alphabetical Index of Tamil Manuscripts by S. Kuppuswamy Sastry, 1932.