பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72

கொண்டு இன்று "பொது மக்கள் இலக்கிய" உரைநடை பற்றி ஆராய்ந்து எடுத்துக் காட்டுகளுடன் விளக்கலாம் என எண்ணுகிறேன்.

வெற்றியும் கொடையும்

வெளியான நூல்களும் ஏட்டுப் பிரதியில் உள்ளன போக நாட்டில் அங்கங்கே வழக்கத்தில் உள்ள பல்வேறு எழுத்துக்களையும் எண்ணுதல் பொருந்தும். அரசாங்கத்தாரும் பிறரும் வடித்த கல்வெட்டுக்களும் கடந்த நூற்றாண்டில் சில உள்ளன. வெற்றி குறித்தும், வேறு பாலம் முதலியன அமைத்தும் உண்டாக்கிய சாசனங்கள் நாட்டில் உள்ளன. அவற்றில் ஓரிரண்டினைக் ஈண்டுக் காட்டல் நலம் பயப்பதாகும்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நெப்போலியன் வீழ்ச்சியுற்றதும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதும் நாடறிந்த வரலாறு. அவ்வெற்றியைக் கொண்டாடு முகத்தான் ஆங்கிலேயர் தம் ஆணை சென்ற இடங்களிலெல்லாம் வெற்றித்தூண் நாட்டி, அவ்வெற்றியைக் கல்லிலும் பொறித்தனர். அவற்றுள் ஒன்று தஞ்சைச் சரபோசி மன்னன் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட சாளுவன்குப்பத்தில் உள்ளதை இன்றும் காணலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் அக்குறிப்புக்கள் அமைந்துள்ளன. தமிழ்க்குறிப்பு உரை நடையாகவே உள்ளது. இரண்டையும் அப்படியே தருகிறேன்.

His Highness Maharaja Serfojee, Rajah of Tanjore, the friend and Ally of British Government, erected this column to commemorate the Triumphs of the British Army and Downfall of Bonaparte—1814.

தமிழில்

இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினாலடைந்த செய சந்தோஷங்களையும் 'போனபாற்தெயின்' தாழ்த்தப்படுதலையும் நினைவு கூர்தற்காக