பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74

கிற மகிமை பொருந்திய கோட் டவ் டிரேகட்ட[1] ரென்னுஞ் சபையார் அருளிச் செய்த உத்தர விேைல நிறுத்தியிருக்கிறதென்று அறியுங்கள்.

௲௮௱௪௰-௵.
திருச்சினாப்பள்ளி ஜே. எப். மார்ட்டினால்

இவ்வாறு நாட்டில் பல பகுதிகளில் பல நிகழ்ச்சிகளையும் செயல்களையும் உதவிகளையும் பிறவற்றையும் பொது மக்கள் என்றென்றும் அறிந்து கொள்வதற்காகப் பல தம்பங்களும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பெற்று, தமிழ் உரைநடையில் எழுதப்பெற்ற விளக்கங்களை அவற்றில் பொறிக்கப் பெற்றுள்ளமையைக் காண்கிறோம்.

ஆங்கிலேயர் கல்வி

1858-க்குமுன் கும்பினி ஆட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர் நாட்டு நேரடி ஆட்சியாகிய விக்டோரியா இராணியின் ஆட்சி தொடர்ந்தது. அக்காலங்களிலெல்லாம் ஆங்கிலேயர் பலர் வாணிபம் பொருட்டும் ஆளுதற் பொருட்டும் இந்நாட்டுக்கு வந்தனர். வந்தவர் இந்நாட்டு மொழியைக் கற்றனர். அவர்கள் கற்ற நூல்களும் பல; கற்பித்தோரும் பலர். அவர்களைப் பற்றிய அன்றைய குறிப்பொன்றைக் காணலாம்.

தமிழ் இலக்கணத் தெளிவு 1893

அங்கிலேயர் வியாபார மாளிகைகளைச் சென்னை, கடலூர் முதலிய இடங்களில் கட்டி வியாபாரத்தைப் பெருக்கி, அரசும் கைபற்றுகின்ற சமயத்தில், அங்கில உத்தியோகஸ்தர்கள் தமிழைக் கற்பது யுக்தமென அதிகாரிகள் தீர்மானித்து, சென்னையில் ‘காலேஜ்’ என்ற ஓர் வித்


  1. Court of Directors.