பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
77

பிரயாசையாய் முன்னோர் மொழிகளைப் பொன் போற் போற்றி நல்ல நூலொன்று முடித்தார்.

தமிழ் வழுவறக்கற்று, அநேக இலக்கியங்கள் பார்வையிட்டு, சமஸ்கிருதமும் தெரிந்துகொண்டு, ‘இலக்கணத்திரட்டு’ எனச் சிறந்த வாசக இலக்கணம் இயற்றியவர் கனம். மார்டின் உவில்பிரெட் (Mr. Martyn Wilfred) என்றவர். இவர் வெகுநாள் உபாத்தியாயராகச் சர்க்கார் பள்ளிக்கூடங்களில் நல்ல வேலை செய்து, பள்ளிக்கூட விசாரணைசெய் (Deputy Inspector) வேலையிலிருக்கிறபோதே தேக வியோகமானர்.

தற்காலத்தில் தமிழ் அபிவிருத்திக்காக அதிகமாய் உழைத்து வருபவர்கள் (Mr.W.Thamotharam Pillai, B.A., B. L., Mr. P. Ranganatha Mudaliar, M. A., Mr. J. M. Vellu Pillay) யாழ்ப்பாணிகளான கனம். தாமோதரம் பிள்ளை, கனம். ஜே. வேலுப்பிள்ளை, பெரியபட்டம் பெற்ற கனம் இரங்கநாத முதலியார் முதலியவர்களே. இவருள் கனம். தமோதரம்பிள்ளை ஏட்டுப்பிரதிகள் மங்கிமறைந்து கிடந்த தமிழ் இலக்கண இலக்கியங்களில் அநேகத்தைக் கண்ணும் திருஷ்டி குறையத்தக்கதாக வெகு கஷ்டத்துடன் வாசித்துத் திருத்திப் பேர்த் தெழுதி, மிகுந்த பொருட் செலவும் செய்து, அச்சியற்றித் தமிழ் பாஷையின் சிறப்புப் பிறருக்கு விளங்க மிக்க கருத்தோடு உழைத்து வருகிறார்.

இது 1893 ஆம் ஆண்டு தாவிது யோசேபு உபாத்தியாயரால் எழுதப்பெற்ற ‘தமிழ் இலக்கணத் தெளிவு’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பெற்றது. அக்காலத்திய உரைநடைக்கும் இதுவே சான்றாகின்றது. இதில் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்து மொழியையும் உரைநடையையும் வளம்படுத்திய பலரை அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் ஆங்கிலேயரைச் சார்ந்தும் சிலர் அவர்களைச் சாராதும் சிறக்க வாழ்ந்