பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
83

முகவுரை: கனம் பொருந்திய மேசர் காலன் மெகன்ஸி துரையவர்கள் வேதநாயக வேதாகம சிரோமணியாருக்குக் குடுத்த திட்டம் அல்லது மெமோரண்டத்தின்படி மாணிக்கவாசகர் சரித்திரம் ஏதென்பதைத் திட்டமாய் விசாரித்தெழுத வேண்டியதாமே. இதைத் தொட்டு அறிய வேண்டியது.

(க. வது) மாணிக்கவாசகர்தெட்சண ராச்சியத்தில் மதுரைப்பட்டணத்தில் பிராமண வங்கி சத்திலே பிறந்து தென்னவன் பிரமராயன் என்கிற பாண்டியனுக்கு மந்திரியாயிருந்து அவருடைய திரவியத்தைக் கொண்டு ஆவிடையார் கோவிலென்று சொல்லப்படுகிற திருப்பெருந்துறையிலிருக்கப்பட்ட திருப்பணிகளைக் கட்டினரென்றும் கடைசியிலே சிதம்பரத்துக்கு வந்து அவ்விடத்திலே யீழத்து ராசாவினிடத்திலிருந்து வந்த புத்தர் சமயத்தாரை வாது பண்ணி அல்லது தர்க்கம் பண்ணியழித்துப் போட்டாரென்றுஞ் சைவ மதத்தாரெல்லாம் வாய் விசேஷமாகச் சொல்லு கிறார்கள்.

ஆலைவர் எந்த வருஷம் எந்த ஆண்டிலே யிருந்தாரென்று வாய் விசேஷமாகச் சொல்லுகிற வர்களையுங் காணோம், புராணத்திலும் காணோம்.

இவ்வாறு மாணிக்கவாசகர் வரலாறு கூறப்படுகிறது. இதில் மொழித் தவறு மட்டுமல்லாது இடம், வரலாறு, பெயர் முதலியனவும் பிழைபட்டிருப்பதையும் காண்கின்றோம். எனினும் இவைபற்றி யெல்லாம் விளங்க அறியாதவராகிய ஆங்கிலேயராகிய மெக்கன்சி அவர்கள் அவரவர் எழுதியதையும் கூறியதையும் அப்படியே வகுத்துத் தொகுத்து வைத்தார். இவ்வாறு சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் செவி வழியாகவும் எழுத்து வழியாகவும் நாட்டில் வாழ்ந்து வளர்ந்து வந்த உரைநடையை நம்மால் காண முடிகின்றது. இந்த உரைநடையில் பல பிழைகள்