பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
85

வாளதற்குச் சம்மதிகுடுக்கவில்லை-அதின் பேரில்லவர்கள் தெருவிலும் முச்சந்திகளிலும் வெத்திலை தோட்டங்களிலும் யின்னம் வெகு யிடங்களிலும் திட்டி வாசல் போலே கட்டி அதுக்கெதிறிக் குறும்பர் உளுக்கார்ந்து கொண்டு சறுவத்திறாளும் அதில் தலை குனிந்து நுழையும்படியாகவும் அதினாலே தங்களுக்கு வணக்கம் நடக்கவும் எத்தினம் பண்ணினர்கள்-அப்போ முதலிமாரும் வெள்ளாளமாரும் தலைகுனிந்து நுழைகிறதுக்கு வதிளாக முதல் காலை விட்டு நுழைந்து யிதனலே யவாளை அவசங்கை பண்ணினர்கள்-என்ற போதைக்கும் அவாளதிகாரஸ்தர்களானபடியினலே பலவிதத்திலும் வெள்ளாளரையும் முதலிகளையும் துன்பப்படுத்தினர்கள். அப்போ துன்பம் அதிகரித்தபடியினலே யிவாளெல்லாரும் யோசினை பண்ணி ஒன்றிலேயும் முடியாமல் கடைசியிலே யொரு அம்பட்டனிடத்திலே போய அவனுக்கு மான்னிய சான்னியம் பண்ணி விக்கிருேம் குறும்பரை யதம்பண்ண யோசினை கேட்டார்கள் அப்போ அவன் சமாளிப்புச் சொல்லி தானதுக்கு உபாயம் பண்ணுகிறேன் என்று திடாரிக்கஞ் சொல்லி யிவாளை வீட்டுக்கு அனுப்பி விட்டான் அதின் பிறகு அவன் தன்னினத்தாராகிய அம்மட்டர் வீடுகளுக்கெல்லாம் போய் அவாளெல்லாரும் தனக்கு உதவி செய்ய வேணுமென்று கேட்டுக் கொண்டான் அந்தப்படியே அவாளெல்லாரும் உதவி செய்கிறோமென்று வாக்குக் குடுத்தார்கள் குறும்ப சாதியாருக்குள்ளே ஒருவன் சென்றுபோனல் இழவுக்கு வருகிற வாளக் கூட்டத்தாரனைவோரும் தலையேகச் சவரம் பண்ணுகிறது வழக்கமாயிருந்தது—

அப்படி ஒருநாள் தறுவாயிலே குறும்பர்களுக்குள்ளே மூப்பாயிருக்கிற ஒருவன் விழுந்து போனன் அப்போ குறும்பர்கள் எல்லோரும்