பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
86

ஏகோபித்துக் கூடியிருந்து அவனிழவு சடங்கு நடப்பிக்கிறதிலே எல்லாரும் மாமூலப் படிக்கு சவரம் பண்ணிக்கொள்ள ஒரு மிக்க உளுக்கார்ந்தார்கள் அப்போ யிந்த அம்மட்டனனவன் தான் பந்து கட்டு பண்ணியிருந்த அம்மட்டர்கள் எல்லோருக்கும் தாக்கிதை பண்ணி அவாளவாள் சிறைக்கிற மனுஷரை அவாளவாள் கொன்று போடக் கற்பித்திருந்தான் அந்தப்படியே யவாளவாள் சிறைத்த மனுஷனை அவனவன் தலையை சிரைத்து கழுத்தண்டையில் வருகிறபோது குரவளைகளை அறுத்துக் கொன்று போட்டார்கள் அப்போயிங்கே மாண்டுபோன குறும்பறுடைய ஸ்ரீகளெல்லாரும் பெலத்த அக்கினி வளத்து அதில் குதித்து பிருணசேதம் பண்ணிக்கொண் டார்கள்-அப்போ ஸ்ரீகள் நெரும்பூரிலே முப்போகம் விளைந்தாலும் உப்புக்கு நெற் கிடையால் போகவென்று சாபமிட்டார்களாம்-குறும்பராலே கட்டப்பட்ட கோட்டைகளின்னம் மேலாகச் சொல்லப்பட்ட யிடங்களிலே முழுதும் யிடிந்து தவிழ்ந்து மண்மேடாய்க் கிடக்குது அதை போய்ப் பார்த்தவர்களிருக்கிறார்கள் அவாளால் கட்டப்பட்ட கேணிகள் அந்தந்த யிடங்களிலே பாழாய்ப் போய்க் கிடக்குது அது யிந்த சதுரங்கப் பட்டணத்திலேயும் யிருக்குது அந்தக் கல்கள் பூறுவங்கண்ட வெகு நாளையின் கல்லுகளாயிருக்குது—

(Mec, Collection, D. 3838)


பஞ்ச தந்திரம்

இந்த அளவோடு இத்தகைய குறிப்புக்களை நிறுத்தி வேறு வகையில் உரைநடை வளர்ந்த வரலாற்றைக் காண்போம். பஞ்சதந்திரக் கதையானது தாண்டவராய முதலியார் என்பவரால் ஆங்கிலேயர் பொருட்டுச் செய்யப் பெற்ற ஒரு நூல் என்பதைக் கண்டோம். இந்நூலை 1825–இல் அவர் எழுதி முடித்தார். எனினும் 1850-இல்