பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
87

அவர் மறைந்தார் என்றும் காண்கிறோம். அவரே கீதா மஞ்சரி என்ற மற்றாெரு வசன நூலும் இலக்கண வினா விடை என்றாெரு நூலும் எழுதினார் என்பர். அந்தப் பஞ்சதந்திரம் என்ற கதை ஆங்கிலேயருக்காகப் படிப்படியாக இலக்கணப் புணர்ச்சிகள் பொருந்த அமையப் பெற்றுள்ளமையும் மேலே கண்டோம். முதலில் வரும் கதைகள் எளிய இயல்புப் புணர்வுடைய வாக்கியங்களாக அமைய, பின் வரவரப் பல்வேறு இலக்கணப் புணர்வுகளையுடைய வாக்கியங்கள் இடம் பெற்றன. இந்தக் கதையே சென்ற நூற்றாண்டிலும் இந் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு பாடநூல்களில் தவறாது இடம் பெற்றமையை அறிகிறோம். அதன் நடை முன் கண்டமை போலன்றிச் செம்மை நலம் சார்ந்திருக்கின்றது. சென்ற நூற்றாண்டின் உரைநடைக்கு அதில் ஒரு சிறு பகுதியையேனும் காணல் தேவையாகின்றது. இதோ அந்த நடைக்குப் புணர்ச்சி இலக்கணம் நிரம்பிய ஓர் எடுத்துக் காட்டு:—

ஐந்தாவது. அசம்பிரேஷிய காரியத்துவம்–கதை 1.

உச்சயினி புரத்தில் வதிந்த தேவநாம வேதியனொருவன் மனைவியோடு இல்லறம் நடாத்தும் நாளிற் குழவியில்லாக் குறையால் இருவரும் ஒரு கீரிப்பிள்ளையை மைந்தனைப்போற் கருதி வளர்ப்புழி ஒரு மகவுண்டாயிற்று. மனைவி அம்மதலையை ஓர் நாள் தூங்குவித்துக் கணவனைப் பார்த்து, “யான் உதகத்தின் பொருட்டுச் செல்லா நின்றேன். நீர் நங் கான் முளையைப் பார்த்திரும், ஒரு வேளை கீரி கடிக்கும்” என்றிங்ஙனம் வகுத்துத் தண்ணீர்க்குச் செல்ல, பின்னர் அக்குழந்தை தொட்டிலிற் கண் வளர்ந்தது அவ்வந்தணனும் ஒரு தடாகக் கரும வயத்தனய்ப் புறஞ் செல்ல, அத்தருணத்தில் ஒரு கிருஷ்ண சருப்பம் பிலத்தினின்றும் புறம்போந்து தொட்டிலின் மேற் செல்லா நிற்கக் கண்ணுற்ற நகுலம் அதை அக்கணமே விரைந்து பற்றி உதறிக் கொன்று பல கண்டங்