பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
89

மரியாதை ராமன் கதை:

௰௮ வது. ஒருவன் காதுக் கடுக்கனை மற்றாெவன் திருடியது.

ஒரு சத்திரத்தல் இரண்டுபேர் வழிப்போக்கர் ஒருவனுக்கொருவன் எதிர்முகமாகத் தலைவைத்துப் படுத்துக் கொண்டார்கள் நித்திரை வேளையிலே வலது காது கீழாப் படுத்திருந்தவனுடைய இடது காது கடுக்கனை இடது காது கீழாகப் படுத் திருந்தவன் கழற்றித் தன் வலது காதிலேபோட்டுக் கொண்டான். விழித்துக்கொண்ட பிற்பாடு கடுத்கனை யிழந்தவன் என் கடுக்கனை ஏன் கழற்றிக் கொண்டா யென்று கேட்க அவனும் என் காதுக் கடுக்கனை நீதான் கழற்றிக் கொண்டாயென்றான், இப்படிக் கலகப்பட்டுக் கடுக்கனை யிழந்தவன் மரியாதை ராமனிடத்திலே சொல்லிக் கொண்டான். நியாயாதிபதியாகிய அவன் திருடனை அழைத்துக் கேட்டவிடத்தில் அவனும் அப்படியே சொன்னபடியினலே நீங்கள் இருவரும் எப்படிப் படுத்துக் கொண்டீர்களோ அப்படி பகுத்துக் கொண்டு காண்பியுங்களென்றான். அப்படியே காண்பித்தபோது திருடனைப் பார்த்து உன் இடதுகாது கீழே இருந்த படியால் அதிலிருந்து எப்படி கழற்றலாம். அவன் இடது மேலே இருந்தபடியால்எளிதாகக் கழற்றிக் கொண்டாய். நீதான் திருடனென்று சொல்லி உடமைக்காரனுக்குக் கடுக்கனை வாங்கிக் கொடுத்துத் திருடனே இருபத்துநாலு அடி அடிப்பித்து ஆறு மாதம் காவலிருக்கச் செய்தான். அத்திருடன் பொய் சொன்னலும் பொருந்தச் சொல்லவேனும் என்றபடி காத்துக் கொள்ளவும் தெரியாமற் போயிற்றேயென்று துன்பமடைந்தான்.

6