பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90



இவைகளேயன்றி நடேச சாஸ்திரிகள் எழுதிய திராவிட நாட்டுப் பூர்வகாலக் கதைகள், மத்தியகாலக் கதைகள் முதலியனவும் படித்து மகிழத்தக்கன. நல்ல உரைநடையில் அமைந்துள்ளன்.

இவ்வாறு சென்ற நூற்றாண்டில் எத்தனையோ வகையான கதைகள் எழுதப்பெற்றும் அச்சிடப்பெற்றும் நாட்டில் உலவிவந்தன. எழுதப்பெறாது செவி வழியாகச் சென்ற நூற்றாண்டுவரை வந்த பல்வேறு கதைகளும் அச்சுச் சாதனம் உண்டான கராணத்தாலே நாட்டில் நூல்களாக உருப்பெற்று உலவின. அவை அனைத்தையும் வரிசைப் படுத்திக் கூறுவதென்பது இயலாத ஒன்று. மரியாதைராமன் கதை (1812). விக்கிரமாதித்தன் கதை, முப்பத்திரண்டு பதுமை கதை (1804), சதமுக ராவணன் கதை (1818), தாடி வெண்ணெய்க்காரன் கதை (1843) விறலிமாறன் கதை (1828), தமிழறியும் மடந்தை கதை (1812) முதலியவை சில. இவற்றுள் சில ஏட்டுப் படிகளாகவும் இருந்து இந்த நூற்றாண்டில் அச்சிடப்பெற்றுள்ளன. இவையுங் இவை போன்ற எண்ணற்ற பிற கதைகளும் நாவல்களும், வளர்ந்து வருகின்ற தமிழ் உரைநடை வரலாற்றில் இடம் பெறத்தக்கவையே என்பது மட்டும் உறுதி.

நாவல்

பத்தொன்பதாம் நூற்றண்டிலே, இத்தகைய கதைகள் மட்டுன்றி இன்று நாட்டில் வழங்கும் ‘நாவல்’ என்னும் புதுவகை நூலும் இடம் பெறலாயிற்று. தமிழில் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நாவலை எழுதி (1835 இல்) வெளியிட்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இத்தகைய நாவல்கள் பற்றியும் தமிழில் உரைநடை வளர வேண்டிய தேவை பற்றியும் தம் முகவுரையில் குறித்துள்ளார். அதுவரையில் தமிழ் உரைநடை வளராமைக்கு உரிய பல காரணங்களை விளக்கி, ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறையில் நீண்ட விளக்க உரை எழுத