பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
91

இயலாத் தன்மையைத் தொட்டுக்காட்டி, தாம் உரை நடையில் இந்நாவலை எழுதியதற்குரிய காரணந்தை அவர் விளக்குகிறார்.

My object in writing this work of fiction is to supply the want of prose works in Tamil, a want which is admitted and lamented by all.

(முன்னுரை)

உரைநடையின் தேவையை அவர் தமது நூலின் மற்றொரு பகுதியிலும் எழுதிக்காட்டியுள்ளார். ‘வசனம்’ என்பதையே அவர் ஆண்டுள்ளார். சென்ற நூற்றாண்டில் உரைநடைக்கு இவர் எழுத்தும் ஓர் எடுத்துக்காட்டு.

வசன காவியங்களால் ஜனங்கள் திருத்த வேண்டுமே யல்லாது செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்திய மல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்.

(42 ஆம் அதிகாரம்.)

இதில் ஆசிரியர் கூறிய அடிப்படையிலேயே பல உரைநடை நூல்கள் சென்ற நூற்றண்டில் தோன்றி வளர்ச்சியுற்றன. இவ்வுரைநடைபற்றியும் நாவல் பற்றியும் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுந்த சில விளக்கங்கள் சென்ற நூற்றாண்டில் இருந்த அதன் நிலையை நன்கு விளக்குவனவாகும். ‘சாவித்திரி சரித்திரம்’ ‘பத்மாவதி சரித்திரம்’ முதலிய நாவல்கள் எழுதிய மாதவையா அவர்கள் 1903 இல் ‘பத்மாவதி சரித்திரம்’ இரண்டாம் மதிப்பின் முன்னுரையில் நாவல்பற்றியும் அதன் நடைபற்றியும் குறிக்கின்றார்.

மற்றெல்லா உயர்தர கிரந்தங்களையும் போலவே நாவலென்னும் கிரந்தமும் படிப்பவர்