பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
95
7. அரசனும் புலவனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (ரூபாவதி நாடகம்)
8. பிரகலாத சரித்திரம் சீனிவாசராகவாசாரியார் (விஷ்ணு புராணம்)
9. சாவித்திரி கதை டி. எஸ். கலசலோசன செட்டியார் (பாரதம்)
10. ஸ்ரீ ராமரும் வாலியும் அருணாசலக் கவிராயர் (இராமாயணம்)
11. பாண்டவர் வெளிப்படுதல் சண்முகக் கவிராயர் (பாரதம்)
12. தந்திரம் எஸ். சுப்பிரமணியப் பிள்ளை (by Sri John Lubbork)
13. சீவகாருண்ய விளக்கம் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை (அருட்பா)

இக்கட்டுரைகளை உதவிய அனைவரும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர உதவி செய்தவர்களே. இவருள் சிலர் பல பெருநூல்களையும் யாத்துள்ளமை அறிவோம். இவர்களுள் ஒரு சிலரைப் பற்றி நாளை தெளிவாகக் காணலாம். இவற்றில் ஒரிரு சான்று காட்டி இன்று அமையலாம். மொழிபெயர்ப்பால் உரைநடை வளர்த்தமைக்கும் இது ஒரு சான்றாகும். கதைகள் வழங்கிய வகைக்கும் அவை சான்று பகரும்.

சாதுமதி கதை

இப்பூதலப் பூவைக்குத் திலகம் போல விளங்கா நின்ற விருதை மாநாடு என்னும் திவ்விய தேசத்தை மனுநீதி தவறாமலும், செங்கோல் வழுவாமலும் மன்னுயிரைத் தன்னுயிர் போல் பாது