பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
96


காத்து அரசு புரிந்து வந்த வேந்தனொருவன் இருந்தான். சூசை வர்மன் என்னும் பெயர் பூண்ட இவ்வரசன் தன் மனைவியுடன் இல்லறம் வழுவாது நடத்தி, பூர்வ சன்மாந்தரத்திற் செய்த கன்ம வசத்தாற் புத்திர பாக்கியம் பெறாது மனவருத்தமுறுங் காலத்துக் கண்மணிகள் போன்ற புத்திரிகள் மூவர் தோன்றினர்.
(முதல் பகுதி)

மனோகரவல்லி கதை

தென் தேசமாண்டு வந்த குண வீரனென்னும் வேந்தனுக்கு மனேகரவல்லி என்ற அருமைப் புதல்வி உதித்தனள். அவள் தாலாட்டுப் பருவத்திலேயே தன் அன்னையை இழக்கப் பெற்ற நிமித்தம, அவள் பிதா அவளை நாளொரு மேனியாய் வளர்த்துத் தாயிழந்த தனி நிலை மனத்திற் சிறிதும் புகாவண்ணம் அவள் அவாக் கொண்டு கேட்கும் அனைத்தையும் அட்டியின்றி அவட்குச் சேகரித்துக் கொடுத்து அவள் மனோஷ்டப் படியே நடந்து வந்தான்,

இத்தகைய தொகை நூல்களால்-சிறப்பாகக் கதை நூல்களால்-சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை நன்கு வளர்ந்தது என்பது உறுதி.

நாடகம்

சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி நாடகங்கள் பல சென்ற நூற்றாண்டில் வெளிவந்தன. அவை பெரும்பாலும் உரைநடை நூல்களே. ஒரு சில பாடல்கள் இடையிடையே விரவப் பெற்றன. சில நாடகங்கள் முழுவதும் பாடலால் ஆனபோதிலும் தொடக்க உரை, அறிமுக உரைகள் அனைத்தும் உரைநடையிலேயே அமைந்துள்ளன. அத்தகைய நாடகங்கள் பலவாக நாட்டில் நடிக்கப்பெற்றன. என்றாலும் ஒரு சிலவே அச்சிடப்பெற்று நூல் வடிவில்