பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூங்குகின்ற சோம்பேறிக் கண்ணி ரண்டைத் துயிலுணர்த்த விழி'யென்று பெயரை வைத்தார் நீங்காத சுறுசுறுப்புக் கொண்ட வாயே கின்னுழைப்பை வியக்கின்றேன் ; உணவை உள்ளே வாங்குகிருய் , தூங்காமல் பேச்சைப் பாட்டை வழங்குகிருய் முழங்குகிருய் முத்த மென்னும் தேங்குழலைச் செய்கின்ருய் , ஐம்uொ றிக்குள் திருவாயே! அட்டாவ தானி நீயே ! வலைக்கன்னி கைகேயி கணவ னும்பொன் வழங்குமரிச் சந்திரனும் வாயே! உன்னல் தலைக்கணியும் முடியிழந்தார் 1 திரெளய திப்பெண் தழைத்தபசும் புறவிதழை அவிழ்த்து விட்டு முளைத்துவரும் மலரைப்போல் ஆவ தற்கு முன்னெருநாள் ஆணைபெற்ருள் ; இதுவும் உன்றன் அலைச்சிரிப்பால் வந்ததுதான் ஆளுல் காஞ்சி அண்ணுவோ உன்னலே அரசு பெற்ருள். உருவத்தால் நல்லவராய் இருப்போ ரெல்லாம் உள்ளத்தால் நல்லவராய் இருப்ப தில்லை. அரிந்துவைத்த நுங்கைப்போல் இருக்கும் வாயே! அமைப்பிலதை ஒத்ததுடன், உதட்டைச் சேர்த்தே உறிஞ்சும்போ துங்கூட நுங்கைப் போல உயர்ந்தசுவை தருகின்ருய் ஆத லாலே உருவத்தால் நீகல்லை சுவைமி குந்த உள்ளத்தா லும் கல்லே, ஊற்று வாயே! 100 பனித்துளிகள்