பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கட்சி மாறும் காதல் அரசியல் முத்திரைப் பொதுமகள் சித்திரா பதிக்கிழம் வாயால் எழுப்பும் ஒயாப் புகாரும். “அரைக்காத சந்தனம், விரைக்காத கன்செய் வண்டுகிண் டாத தண்டுத் தாமரை, கோக்காத முத்துக் கூட்டம், தென்றல் தாக்காத சோலை, தரிக்காத சேலை இருப்பதால் என்ன பயனே? பாவம் ! மணிமே கலையை மாதவிக் கொடியவள் அணிமே கலையாய் ஆக்க மறுக்கிருள்' என்று கூறி இளைஞர்பட் டாளம் மன்று தோறும் எழுப்பும் புகாரும்... மலிந்தகா ரணத்தால்இம் மாநகர் தன்னைப் புகார்ங்கர் என்று புகல்வது பொருத்தமே! இங்குக் கொடிப்புலி உறங்கும் கோட்டைமா ளிகையில் ஆட்டன் அத்திக்கு அழகிய மகளையும், கோட்டுக் களிற்றுக்குக் குமரிப் பிடியையும் தழுவக் கொடுத்துத் தன் தோள் இரண்டை வெற்றிச் செல்விக்கு விட்டுக் கொடுத்தவன் கரிகால் வளவன் அந்த வளவனே) பங்கு போடாத சிங்கா தனத்தில் தங்கி யிருந்து தமிழ்ப்பெரு கிலத்தை ஆண்டவன் : இந்த அழகுப் புகாரில் புகார் W 09