பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழாத புகழை விதைத்துச் சாவில் எழாதவன் ஆளுன் என்பதை அறிவோம். எள்ளி வந்தவர்க் கிடியேறு போன்ற கிள்ளி வளவனும் நலங்கிள்ளிச் சோழனும், தமிழ்ப்பெரும் புகாரைத் தலைநக ராக்கித் தனியர சோச்சிய தழும்பு மறவர்கள். பாடலை விரும்பிச் சங்கம் அமர்ந்து கூடலை ஆண்ட மன்னர்கள், விண்ணின் அளவுக்குக் கோயில் எடுத்தனர் ஆளுல் நிலவுக்குக் கோயில் எடுத்த பெருமை நிச்சயம் புகார்க்கே! பிறநகர்க் கில்லை, மைக்கண் மகளிர்க்கு மாசு கற்பித்துப் பொய்க்கரி கூறும் புல்லரை திருடிப் பதுக்கும் கள்வரைப் பட்டப் பகலில் சதுக்கப் பூதம் மிதித்திங்கும் கொல்லுமாம். சதுக்கப் பூதம் கிடைக்கு மாயின் சட்ட சபையின் வாசலில் இன்று கட்டி வைத்துக் கண்ணியம் வளர்க்கலாம். புனல்விளை யாடியும் பொழில்விளை யாடியும் பாடல் ஓர்ந்துக் காடகம் நயந்தும் பட்டில் தமது பொன்னுடல் பதுக்கியும் ஆவி உடையில் அழகை மறைத்தும் 1 || 0 பனித்துளிகள்