பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தச்சனது பட்டறையில் புறப்ப டாத தங்கத்தேர் மாதவியோ, கோவ லற்குப் பச்சைமணி மாலைதந்தாள் மயக்கந் தந்தாள் ; படுத்துறங்கப் பஞ்சணையாய்த் தோளைத் தந்தாள். கொச்சைமொழி பேசுகின்ற கிளிக்கூட் டங்கள் கூடிகின்று பொதுக்கூட்டம் நடத்தும் காவில் கச்சரிக்கும் சாதலினை மாத விக்கு காள்தோறும் அவன்தந்தான் ; ஊடல் தந்தான். பூப்பந்தல் புன்னைமரம் போடு கின்ற புகார்நகரக் கடற்கரையில், புதுக்கொ ழுந்துத் தீப்பரப்பும் மாமரங்கள் மலர்வி ரித்துத் தேன் சிதறும் இளவேனிற் பருவங் தன்னில். மாப்பிள்ளை கோவலனும், அரங்கில் ஆடும் மாதவித்தேன் மலர்க்கொத்தும் பிரிய லாஞர். பூப்பட்டுப் பொன்னுறைக்குள் தூங்கும் யாழைப் புழுதியிலே புரளவிட்டுப் பாணன் போனன். ஊர்சுற்றப் புறப்பட்டுத் தெருக்கள் தோறும் உருண்டுருண்டு திரிந்தாலும், முடிவில் ஓர் காள் தேர்வந்து கட்டாயம் நிலையைச் சேரும். தேர்போலக் கோவலனும் சுற்றி விட்டுக் கார்குழலை கண்ணகியை வந்த டைந்தான். காலொடிந்து கையொடிங்து தோற்றுப் பின்னர் போர் வீரன் நிற்பதுபோல் எதிரில் நின்ருன் , புது வாழ்வைத் தொடங்குதற்குத் திட்டங்தந்தான். கோவலன் 115