பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திக்கும் நெஞ்சத் துணிவின்றிப் பாண்டியன் குந்திக் கிடக்கும் காட்சி புரிகிறது. பஞ்சுபோல் கரையோடு பழுத்த பழமாகச் செஞ்சொற் கவுந்தி அடிகளிங் கிருக்கின்ருர், குனிந்ததலை நிமிராமல் என்தங்கை மாதவி பனிமுல்லைக் கொடிபோலப் பக்கத்தில் இருக்கின்ருள். இன்றைக்கும் அவளழகு குறையவில்லை அவள்கினைத்தால் குன்றப் பெருந்தோள் கோவலரைத் தன்னுடைய பார்வையில் கட்டிப் பாட்டால் சிறைசெய்து கொடிக்கும் மெல்லிடையால் நோகவைத்துச் சதங்கைகொஞ்சும் அடிக்குள் மறுபடியும் அகப்படுத்தி விடுவாளோ என்றெண்ணும் அச்சம் எனைவிட்டு நீங்கவில்லை, கண்ணகி 1 3