பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கோப்பெருங் தேவி கோபிப்பாள் என்றெண்ணி அவசர மாய்ஓடி ஆராய்ச்சி செய்யாமல் என்நகை யோடென் புன்னகையும் பறித்துவிட்டாய் ! கவியரசர் எல்லாம் காதலிலே மூழ்கிப் புவியை மறந்து வாழ்வதிலே தப்பில்லை. பாராளும் அரசியல் தலைவரெல்லாம் காதலினை ஊறுகாய் போல ஒருவிரலால் தொடவேண்டும். ஊறுகாய் ஒன்றையே உணவாகக் கொண்டுவிட்டால் வேறு வினைவேண்டாம் ; வெண்கொற்றக் குடை சாயும் ! பெண்ணுகப் பிறப்பெடுத்து நான்வாழ்ந்த அங்காளில் என்றன் உணர்வுகளை எவரும் மதிக்கவில்லை. கல்லாக மண்ணுகக் கருதீனிர் ! இன்றைக்கும் கல்லில் சிலைவடித்துக் கைகூப்பி வணங்குகிறீர் ! பனித்துளிகள்