பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 என்னிடத்தில் மாய்ந்த இளம்பெரு வழுதியென்பான் கன்னித் தமிழ்ப்புலவர் கவிதையிலே ஏறிவிட்டான். கற்பகத்தின் பூங்கொம்பாய்க் காமன்தன் பெருவாழ்வாய் அற்புதமாய் அவதரித்த ஆரூர் அழகரசி என்றன் உயர்பெருமை எண்ணியன்ருே தன்பெயரைப் பரவையார் என்று பலர்புகழச் சூட்டிகின்ருள். காஞ்சித் திரையன் கடலின் குழந்தையன்ருே? பொன்னி நதியிழுத்துப் புரட்டிவந்த அத்தியினை மன்னன் கரிகாலன் மகளிடத்தில் நான்சேர்த்தேன். "காதலரைச் சேர்ப்பதிந்தக் கடல்வேலை , எனவேதான் என்நெய்தல் நிலத்தில் இருக்கும் தலைவனுக்குச் செந்தமிழ்ப் புலவர்கள் "சேர்ப்பன்'என்று பெயர்வைத்தார்.