பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநூறு ஆண்டுகட்கோர் முறையே தோன்றும் பயனுள்ள நூல்போலக் குறிஞ்சிப் பூக்கள் சிலவாண்டுக் கொருமுறையே பூக்கும் ; காந்தள் சிற்றிதழ்கள் பாக்குவெட்டி போலத் தொங்கும். அழகான ஓர் காளை வருதல் கண்டால், அழகரசி ஒடையிலே சருக்கி வீழ்வாள் ; குலைவாழைப் பழத்தையொரு களிறு தூக்கிக் கொர்ணவதுபோல் அவளையவன் மீட்டுச் செல்வான். வானுலகம் சிறந்ததென்பர் : மணம்ப ரப்பும் வளஞ்செறிந்த கற்பகக்கா இருக்கு தென்பர் : தேனுக்கு மேலினிக்கும் அமுதம், அங்குத் தெருவெல்லாம் ஒடுதென்பர் உயர்ந்த தேவ கானத்தைக் கனிமொழியால் தோற்க டிக்கும். கன்னியர்கள் கைப்புறத்தில் இருப்பர் என்பர். வானத்தில் இத்தனையும் இருந்தும், கந்தன் வள்ளிக்குக் குறிஞ்சியினைத் தேடி வந்தான். அருவியென்னும் நீர்ப்பாம்பு கல்லி டுக்கில் அசைந்துவரும் குறிஞ்சிகிலக் கடவுள் கூர்வேள் முருகனென்பர் கான்கூட முருகன் , அந்த முருகனைப்போல் சிலநாட்கள் மானைத் தேடிச் சிறுகுடியின் பக்கத்தில் செல்வேன் வாயால் சிரிப்புமணி யடிக்கின்ற குறத்திப் பெண்கள் வருவார்கள் தினகாக்க என்று நிற்பேன் 1 வள்ளிமான் இங்காளில் வருவ தில்லை. 436 • , - - ---------- - سس. ರ್uಗಿ ಕಿಣಗಿ