பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்துறையில் ஐயத்தின் பின்னல், கானும் அடுதத்துறை துணிவென்று சொல்வர் வாச முகப்பொடியால், குதிச்செருப்பால், டம்பப் பைகள் முன்கையில் தொங்குவதால், ஒருவண் ணத்தில் வகைப்படுத்திச் சேலைசட்டை வளையல் பொட்டு வரிசையுடன் அணிவதனல், உதட்டுச் சாயம் மிகைப்படுத்திப் பூசுவதால் ஆகா ! இந்த மெல்லியலாள் பெண் ' என்று துணிவர் ஆண்கள். குறிஞ்சியிலே மறத்தமிழன் அன்று வாழ்ந்த குற்றமற்ற வாழ்க்கையினைக் கண்டோம் ஓடி வரும்பளிங்கு கீரோடை தனிற்கு எளித்து, வசந்தத்தை வரவேற்று, பொதிகைக் குன்றில் இருந்துவரும் தென்றலுக்கு வாழ்த்துக் கூறி, இனியகுயில் இசையருந்தி. இயற்கை யோடு பொருந்தியன்று காதலித்து வாழ்ந்த வாழ்க்கை பொற்காலம் ! அக்காலம் இனிமேல் ஏது ? ஓர்பாட்டில் தொண்ணுற்று மூன்று பூவின் உயர் சிறப்பைக் குறிஞ்சியிலே பாடி, பொன்ருப் பேர்பெற்ற கபிலனுக்குப் பின்னல், நானும் பின்பாட்டுப் பாட வந்தேன் கபிலன் பாட்டோ கார்பூத்த மலர்ப்பாடல் என்றன் பாட்டோ, கபிலமலர்க் கடியிலுள்ள காம்புப் பாடல். சீர்பெற்ற ஐந்திணைக்குள் பிறபாட் டெல்லாம் செவ்வாழை குறிஞ்சியொன்றே பலாப்பாட் டாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா 14.4.73 குறிஞ்சி 1 39