பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னிசைக் காந்தம் இழுக்க எழுந்து தன்னை மறந்து கடந்தான் கண்ணன். மெல்லிடைக் கோதை நாளும் மிதிக்க மல்லாந்து கிடக்கும் மார்புப் படிகளில் ஏறிஞன் மாடியில் இசைக்குயில் மகிழ்ந்து வாரி இறைத்த அருவியில் குளித்தான். இருவிழி வண்டுகள் வீணையில் மொய்க்க சிறுவிரல் நண்டுக் கரங்கள் நடக்க வாய்மலர் விரிந்து வண்டமிழ்த் தேனை ஓயாது பிலிற்ற உட்கார்க் திருக்கும இதய நாயகியை இமைக்காமல் பார்த்தான்.

தண்டு வீணையில் அவன் நிழல் விழுந்ததும் கெண்டை விழிகளைத் தூக்கினாள் கிளிமகள். துள்ளிய மெல்லிசை அறுந்தது பார்வையால் அள்ளி விழுங்கிளுள் அவன்பே ரழகை. ஒருசில நொடிகள் ஊமை நாடகம். பின்னும் இதழ்களை மெல்ல விரித்துக் 'கண்ணா' என்ருள்.மீதிச் செய்திகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டான்.

'ஈரோட் டுக்குத் தந்தை சென்றார் வீரா சாமி விடிந்துதான் வருவான். இனிக்கும் நினைவுடன் இன்றிரா தனிமையில் கனிக்குலை உமக்காய்க் காத்துக் கிடக்கும்’ என்றாள் கோதை; கண்ணன் என்றாள் .

கண்ணீர்த்தவம் 11